வெள்ளி, 17 அக்டோபர், 2014

மூங்கில் இலைபறித்து
முத்தம்மா  நடக்கையிலே
அவள் சுமந்த   மூங்கில்
இலையினில்  ஓர்  பனித்துளி
ஏங்குவோர் துயர் துடைத்து
செம்பியனும்  திரும்புகையில்
முத்தம்மா  தலையினிலே
வாடும்  பனிநீர் கண்டனனே
தூங்கும் பனி  நீரே
என்ன துயர் கொண்டாய்
கொண்டதுயர்  சொன்னால்
குறைதீர்க்கப்பார்ப்பேன்
தூங்கும்  பனி நீரில்
மூன்றுவகை  இன்பம்
மூன்றுவகை  இன்பம்
அது முத்தமிழேயாகும்
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே 
வாங்கும் கதிர் வாழ்க
வண்டமிழ்  வாழ்க
வண்டமிழால் வையகமே வாழ்க
வாழ்க வாழ்க  அனைவரும்  வாழ்கவே


மாற்றங்கள்  பூசும் வர்ணங்கள்
அழகாக  இருக்கின்ற  போதிலும்
சில  சமயம்  சகிக்க முடியாத
வர்ணங்களையும்  பூசி  செல்கின்றது   
நல்ல  பூச்சுகள்  பெய்த மழையில்
நனைந்து கரைவதுபோல்
நல்ல மாற்றங்கள்  அழிந்து போகின்றனவே
அரசியலிலும்  கலையுலகிலும்
நல்ல  வர்ணங்கள்  பூசப்பட்டது
மாறுதல்  வர்ணங்கள்  மாறி
அனைத்தும்  நசிகின்றனவே
மனதை  கொள்ளையிட மறுக்கின்றது
அநியாயம்  செய்தோரை தலையில் சுமப்பதும்
நாச சக்திகள் கோலோச்சுவதும்
பனையின் உயரத்தில்  இருக்கின்றது 
மாற்றமே வா  நல்ல  வர்ணங்களைப்  பூசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக