புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளிக்   கிடாயடிப்பும்   பாபமும்


மனிதன் பாபங்கள்  செய்தே வாழப்   படைக்கப்பட்டவன் அது அவனுக்கு படைத்தவனால் இடப்பட்ட  சாபம்.  அவனின்  வளர்வுக்கு  பாபம்  செய்ய வேண்டிய தேவை  தவிர்க்க முடியாதது,  பாபம்  என்றால்   புணர்வில்  ஒரு பெண்ணை  கசக்க  முடியாதே, அங்ஙனம்  நோக்கின்  புணர்வதும் பாபமே,    அந்த  கசங்கலிலேதான்   அனைவரும் மகிழும் ஓர்   உயிர்  உதயமாகின்றது  ஆழ ஆராய்ந்தால் அவன் செய்தது பாபம்  ஆனால்  அது இன்றியமையாதது அவனுக்கு - உடலின்  ஆரோக்கியம் குறைத்து  விரதமிருக்கின்றான்  பின் பழைய  ஆரோக்கியம் பெற  மிருகத்தை கொன்று அதை புசிக்க வேண்டிய பாபத்தை செய்கின்றான் - இது   இன்று நேற்று அல்ல  வேதகாலத்திலிருந்தே  நடைபெற்று  வருகின்றது  ஒரு  நலனுக்காக  நூறு  குதிரைகளை அக்கினியில்  தள்ளி  யாகம் செய்தது  ஏன்?  மனித குலம்  வாழவே  என்கின்றது புராண இதிகாசம் -  இன்று தீபாவளிக்கு  கிடாய்  அடித்து  உண்பது  மகிழ்வைத் தருகின்றது  மனிதர்களுக்கு  அது பாபம்  என்கின்ற போதிலும்  மனிதன்  மகிழ்கின்றான் அதுவே உலக இருப்புக்கு  அவசியமாகின்றது ஒவ்வொரு  மகிழ்விலும் உலகம் முன்னே நகர்கின்றது  என்பதை எவரும் மறுக்க முடியாது .  பெண்ணிடமிருக்கும் இன்பத்தை அனுபவி  அதை  குழந்தை பெற பயன்படுத்தாதே  அது பாபம்  என்றார் டாக்டர்  கோபூர்  அவர் சொன்னதை  மனிதர்கள்  ஒப்புக்கொண்டார்களா இல்லையே - பாபங்களை தங்கள் மகிழ்வுக்காக  மக்கள் செய்துகொண்டேயிருக்கின்றார்கள்  . அதற்காக  இன்னொருவரை  தாக்குவது கொல்வது
சரி என்று பொருள் கொள்ள வேண்டாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக