வியாழன், 9 அக்டோபர், 2014

 வாழ்க  சங்கானை  நூல் நிலையம்


பரவாயில்லை  பெடியன் கொஞ்சம் 
தமிழறிவு உள்ளவன் என்று  யாராவது
என்னை  தடுமாறி  சொல்லி விட்டால்
அதற்கு  பொறுப்பு  நானில்லை 
சங்கானை  நூல் நிலையம் 

சுடு  வெயிலால்  சுத்தி சுத்தி
சைக்கிலோடி  சண்டித்தனம்
காட்டும்  துணவிச்  சந்தியை
தாண்டி  ஓடிவர   சங்கரத்தை
வரவேற்கும்

ஐயோ  அதுமட்டுமா
ஆங்கோர்  எலுமிச்சையழகி
படலையை அரைவாசி  சாத்தியபடி
என்னை  பார்த்து  விருப்ப  முறுவல்
காட்டுவாள்  சில சமயம்
முப்பத்திரெண்டையும்
காட்டுவாள்

 ஐயோ 
என்று  மனம்  பயந்து
இறுக்கி மிதிக்கும் கால்கள்
காதல்  பேசும்   தைரியமில்லாத 
பிள்ளை, அந்த  நினைவு
எப்போதாவது  எனக்குள் 
நெளியும் சுழியும்

கடைசிப்பந்தி  வாசிக்கையில்
தம்பி  பூட்டப்போறம்
என்ற குரல்  இயமன்  வந்த ஓசை போல்
அல்லது  டென்மாக்கில்
ஆறரை  மணி  குளிரில்
அலாரம்  அடிப்பதுபோல்  இருக்கும்

அண்ணே  ஒருநிமிஷம்  என்று 
இடதுகையை  தூக்கி  காட்டியபடி
அந்தக் கையை  மடக்க வேண்டும் என்ற
உணர்வின்றி  பந்தி படித்து  வெளியேறிய நாட்கள்
அதிகம்.-  வாழ்க  சங்கானை  நூல் நிலையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக