வெள்ளி, 10 அக்டோபர், 2014

சினிமா  பார்க்கின்றோம் அதிலே புளுகும் பொய்யும் காட்டப்படுகின்றது
அதை இரசிக்கின்றோம் மகிழ்கின்றோம்  அதில் நடித்தவர்களை  பெரிய
ஆட்கள்  என்று  போற்றுகின்றோம்  கொண்டாடுகின்றோம் இரசிகர்  மன்றங்கள் வைத்து  அவர்களை முதலமைச்சர் ஆக்கும்  கனவுடன்  உழைக்கின்றோம்  அந்தப் பொய்யை கொண்டாடுகின்றோம்
நாம்  அல்ல  தமிழ் நாட்டு  இரசிகர்கள்  என  கொள்க . நாமும் நமது வாழ்வும் உண்மைபோல்
தெரிந்தாலும் அதுவும்  பொய்யே  ஒருநாள்  சாம்பல்தான்  மிஞ்சும்
அறிவில்  உச்சம் கண்ட காலம் என்கின்றோம்  ஆனால்  கொடுங் கொலைகள் கற்பழிப்புகள்
கொடிய  கழுத்தறுப்புக்  கொலைகள் நின்ற பாடில்லை   இன்றே  மனிதன்  சகல  வசதி
வாய்ப்புகள் இருந்தும்  சிந்தியாது  காட்டு மிராண்டியாக  நடக்கின்றான் என்றால் அன்று
சாதாரண  மனிதர்கள்  எப்படி  கொடுமைகள் செய்திருப்பார்கள்  அவர்களை  நல்வழிக்கு
கொண்டுவர  சொல்லப்பட்ட   கதைகளே  புராணங்கள்  இதிகாசங்கள்  அதிலே  இருக்கும்
படிப்பினையைத்தான்  எடுக்கவேண்டுமே தவிர  இராவணனுக்கு  பத்து தலையா  என்று கேட்கக்கூடாது  பத்து தலை என்றால்  பத்து மனிதர்களுக்கு  இருக்கும்  பலம்  உள்ளவன் என்றே
பொருள்   பூமியை சுருட்டினான் என்றால்  பூமியில் மனிதர்கள் வாழ முடியாது  செய்தான் 
என்றே  பொருள்  அதை  பாதளத்தில்  மறைத்தான் என்றால்  தான்  கெடுதல்களை  செய்ய
பணித்துவிட்டு  பாதாளத்தில்  மறைந்துகொண்டான்  (பங்கர்) என்று  எடுக்க வேண்டும்
அறிவுடையோர் ,  பன்றிவடிவில் மாறுவேடம் போட்டு சென்றார்  என்று  கொள்தல் வேண்டும்
படங்களில்  மாறுவேடத்தில் போய்  எம்ஜிஆர்  கள்ளர்களை  பிடிப்பதுபோல்  அடிமைப்பெண்ணில் 
மயில் போல்   நாய் போல்  மாறுவேடம்  போட்டு ஆடுவார்களே  அப்படி .     

  அதுபோல  சினிமா  இல்லாத  அந்த நாட்களில்  பொழுதுபோக்க  கட்டிய
ஒரு கதைப் பின்னலே  தீபாவளிக்கான  பொய்க்கதையும் - கொடியவன்  அழிந்து  மக்கள்
நிம்மதி  அடைந்தார்கள் என்ற  மகிழ்வுத்திருநாள்  - தமிழர்கள்
அசுரர்கள்  என்பது  உண்மையோ பொய்யோ  சரியாகத்தெரியாது
இராவணன்  பிராமணன்  அவன்  இந்தியாவின் நௌடா  நிலத்தை சேர்ந்தவன்
பிறகு இலங்கை வந்து குடியேறினான்  - கள்ளை  குடிக்கிறது  ஆட்டை மாட்டை
அடிச்சு  அதன் தலையை   மூளையை  குடலை தின்பது  இரத்தத்தை  சுண்டி  சாப்பிடுவது
நம்மவனை  எதிரிக்கு  காட்டிக்கொடுப்பது , உடலை  அழகாக பேணாது  பரட்டை தலையுடன்
அலைவது  பெரிய பற்களுடன்  சுத்துவது ஒழுங்காக சவரம் செய்வது கிடையாது  வாயால் இனிய வார்த்தை பேசுவதில்லை   தூசிப்பது  கோள்  மூட்டுவது   களவாக  மாற்றான்  மனைவியை  கவர நினைப்பது  களவும் பொய்யுமா  பேசுவது  பொறாமைப் படுவது  மாற்றான்  பொருள்களுக்கு 
ஆசைப்படுவது  நான்தான்  பெரியாள்  எனக்குத்தான்  எல்லாம் தெரியுமென்று  இறுமாப்புக் கொள்வது
காசிருந்தா மற்றவரை  அடிமையாக்குவது  அதிகாரம் செய்வது காசு கொடுத்து  கொலை செய்விப்பது 
பெரிய தொந்தியுடன்  அரக்கி அரக்கி  நடப்பது   குழுவாக  சேர்ந்து  சொந்த இனத்தவனை  அடிப்பது வெட்டுவது குத்துவது சுடுவது   என்று  கழிசறை  வேலை செய்பவர்கள்  அதிகமாக  இருப்பது  தமிழர்களுக்குள்  இப்படி  நடப்பவர்களை  மற்றவன் அரக்கன் என்று சொல்வதில் தவறென்ன  எங்கள்  ஆளாக  மகுடா சூரன்  இருந்தாலும் பிழை விட்டால் பிழையே , தமிழ்க் கடவுள் முருகனே  சூரனை  வதைத்தார்  காரணம் தவறு செய்ததால் என்பது  கந்த புராணக் கதை  அதன்வழி  பார்த்தால்  தமிழன்  பிழை செய்தால் தமிழனே  தண்டிப்பான் -  பிராமணர்கள்  தமிழர்களுக்கு  தலையில்  மிளகாய்  தடவி ஏமாற்றி சடங்குகள் செய்வது தப்பு  அதை  வரவேற்கவில்லை  ஆனால்  எனக்கு மீறிய ஒரு  தாங்கும்  சக்தியுண்டு என்பதை  உணர்கின்றேன்  அதை   கடவுள் என்கின்றார்கள்  அந்த சொல் பிடிக்கவில்லை என்றால்   பூ என்று  சொல்லுங்கள் இல்லை  வேறு ஏதாவது  சொல்லுங்கள் - கடவுள் இல்லை என்று
பெரிய  கதை பேசி கிண்டல் செய்தவர்கள்  பெரிய பெரிய  சிந்தனையாளர்கள் எல்லோரும் இறுதியில்
வாழ்வில்  தாழ்வு வர  போக்கிடமின்றி  கடவுளை  வணங்கினார்கள்  காவியம்  படைத்தார்கள்
கண்ணதாசன்  ,  பெரியார்தாசன்  ,  சிலர்  களவாக  சாமி கும்பிட்டுவிட்டு மேடையில் கடவுள் இல்லை
என்று  பேசினார்கள், கடவுளை சாட்டி  வியாபாரம்  செய்பவர்களை  வெறுக்கின்றேன்  - அன்பு வாழ்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக