ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஒழுங்கு 

இங்கே  ஒன்றை  பெறுவதென்றால்  டேனிஷ்  மக்கள்  வரிசையில் ஒழுங்காக நின்று  பெறுகின்றார்கள் 
இடையில் புகுந்து  ஒழுங்கை எவரும்  குலைப்பதில்லை அப்படியே  ஒருவர்  இடையில் புகுந்தால் பின்னால் நிற்பவர்கள்  அந்நபரை  கண்டித்து  வெளியேற்றி  விடுவார்கள்  அப்படி நடந்ததை இங்கு  கண்டதேயில்லை  ஆனால்  எங்கள்  நாடுகளில்  (இலங்கை,  தமிழகம்)  பேருந்துக்கு  சீட்டு வாங்க  (டிக்கெட்) திரைப்படத்துக்கு சீட்டு வாங்க  தொடருந்துக்கு சீட்டு வாங்க  கோயிலில்  புற்கை வாங்க  சாமி  கும்பிட  தேரில் இருக்கும் சாமிக்கு  அருச்சனை தட்டை  கொடுத்து  அருச்சனை செய்ய  வேறு எதுவெதுக்கெல்லாமோ  நெருக்குவதும் தள்ளுவதும்  மோதுப்படுவதுவும்  அசிங்கம் அசிங்கம் ,  அந்தப்பழக்கம்  இங்கு  வந்தும்  விடப்படவில்லை - சில ஆண்டுகள் முன்பு  பாரிசில்  இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சென்று தரிசித்துவிட்டு  அவர்கள்  வழங்கிய  அன்னதானத்தை  வாங்க சென்றேன்  எங்கள்  மக்கள்  அதை வாங்க  நெருக்குப்பட்டு பல வழிகளில்  கையை கோப்பைகளுடன் நீட்டினார்கள்  வரிசையில் நின்று ஒழுங்காக  வரத்தெரியவில்லை மிகவும் வெட்கத்துடன்  ஓரத்தில் நின்று  நடக்கும்  கூத்தை  அவதானித்தேன்  எனது  அமைதியையும்  நெருக்குப்படாமல்  ஒதுங்கி பொறுமையுடன்  நிற்பதையும்  அவதானித்த  வழங்குனர்  என்னை  மகிழ்வுடன் பார்த்து  எனது கையிலிருந்த  கோப்பையை  தானாகவே  வாங்கி   அன்னக் குழையலை  கோப்பையில்  இட்டு  வழங்கினார்  எனக்கு மிகவும்  உள்ளுக்குள் பெருமிதமுண்டானது அவரின்  பண்புகண்டு நன்றியை கண்களால்  சொன்னேன்  அவரும் கனிவுடன்  ஏற்றுக்கொண்டார் ,   நமது மக்கள் சிந்தித்து ஒழுங்காக நிற்கவேண்டும் அல்லது நிர்வாகம்  சொல்லியாவது  வழிநடத்தல்  வேண்டும் எமது  ஒழுங்கின்மையைக்  காணும்  ஒரு  அந்நியர் (வெள்ளையர் ) எம்மைப்பற்றி  எவ்வளவு அசிங்கமாக  உள்ளோடுவார் என்று நினைக்க வேண்டும் - எதற்கிந்த தள்ளு முள்ளு,    கலாசாரம் பண்பாட்டில் மிக மிக பெரியவர்கள் சிறந்தவர்கள்  தமிழர்கள்  என்று மார்தட்டிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது - மகனை   மகளை  சொந்த சாதிக்குள் மணமுடித்து கொடுப்பது ஒன்றே  கலாசாரம் ,  பண்பாடா ?

டிஸ்கோதீக்கில்  மதுபோதையிலானாலும்  வெள்ளை  இளம்  பிள்ளைகள்  வரிசையில் நின்று
அனுமதி சீட்டை  பெறுகிறார்கள்  உள்ளே  ஜாக்கெட்டை  கொடுப்பதும்   எடுப்பதும்  அமைதியாக நின்றே  கோலா பியர் வாங்கவும்  ஒழுங்காக  அமைதியாக  நின்று கொள்வார்கள்  இதையெல்லாம்  நமது  மக்கள்   போய்  பார்த்திருந்தால்  அநாகரிகமாக  நடந்துகொள்வார்களா - உழைப்பதும்  சீட்டு கட்டுவதும் ஊராவீட்டு  கதை பேசுவதும் எழுப்பங்காட்ட  சீட்டு காசையெடுத்து  விழா நடத்துவதுமே
எம்மவர்களின்  மாயக்களிப்பு - வெளியில்  வந்து உணவு அருந்துவதில்லை  நாலு  வெளியாருடன் 
பழகுவதில்லை   தொடரை பார்த்துக்கொண்டு  வீட்டுக்குள்ளேயே  இருப்பது  சங்க விழா  பிறந்தநாள்
விழா  திருமணம்  என்றாலே வெளியில் கிளம்புவார்கள் -  வெயில் கொளுத்தி  அடித்தாலும்  வெளியில்
கடற்கரைக்கு  செல்வதில்லை  பல ஆண்டுகள் முன்பு  ஒருவரை கேட்டேன்  ஏனண்ணை  வெளியில
வராமல்  அறையை  பூட்டிக்கொண்டு  கிடக்கிறியள் என்று ,  வெளியில  போனா  ஐஸ்கிறீம்  செலவு  வரும் என்றார்  அந்த  இன்றைய  மில்லியனர்  இவர்கள்  எப்படி  மில்லியனர்கள்  ஆனார்கள்  என்று  ஊகிக்க முடிகிறது.  காசு சேர்க்கும்  இயந்திரங்களாக  வாழ்க்கை  ஓடுகிறது.

 "கொடுப்பதுவும் துய்ப்பதுவும்  இல்லார்க்கு  அடுக்கிய
 கோடி  உண்டாயினும் இல்" (குறள் 1005)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக