ஞாயிறு, 26 அக்டோபர், 2014

என்னை மீட்ட ஆளில்லையோ 
ஏங்கியது  யாழ் 
என்னை முகர  யாருமில்லையோ 
ஏங்கியது பூ 
என்னைச் செலுத்த  யாருமில்லையோ 
ஏங்கியது  படகு 
என்னை  வாங்க  யாருமில்லையோ 
ஏங்கியது  அன்பு 
என்னை விரிக்க யாருமில்லையோ 
ஏங்கியது நூல் 
என்னை மதிக்க  யாருமில்லையோ 
ஏங்கினான் ஏழை 
என்னை  முதல்வராக்க  யாருமில்லையோ 
ஏங்கினான்  நடிகன் 
என்னைக் காக்க  யாருமில்லையோ 
ஏங்கியது  தமிழ் 
என்னைத் தொட  யாருமில்லையோ 
ஏங்கினாள்  முதிர்கன்னி 

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக