புதன், 15 அக்டோபர், 2014

வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள்  வாடுவதில்லை
அறிவில்  ஞானத்தில்
அம்  மலர்கள்  மலர்கையில்
சில்  வண்டுகள் வஞ்சகப் பார்வை
அவை  சிந்திக்க  தலைப்படா 
சிறு  கோழிகள்  போல்  கொத்தும்
இருள் கவ்வும் நெஞ்சுகள்
வெளிச்சங்  காணா   வெளியே வரா
பேதங்  கொண்ட  நாகங்கள்
வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள்  வாடுவதில்லை
பித்தளைக்கு  தங்க  முலாம்
காசு கட்டுகளே  கோழிகளின்  தீனி
அறிவில் ஏற  ஏணி  இல்லாத  கோணிகள்
வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள்  வாடுவதில்லை
மழைக்கும்  வெயிலுக்கும்  காற்றுக்கும்
இடிக்கும் மின்னலுக்கும்  எதற்கும்
ஓடுகள்  இளகுவதில்லை
ஒளிவீசும் சூரியனை 
எந்த மாசும்  அசுத்தம்  செய்யா

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக