மனிதர்கள் குளிர்காலத்தில் மகிழ்வாக இருக்க வேண்டும் தீபம் ஏற்றி அழகாக்கி இருளை அகற்ற வேண்டும் அதை கொண்டாட ஒரு மகத்தான நாளொன்று வேண்டும் அதற்கு ஒரு கதை வேண்டும் கட்டினார்கள் கொண்டாடினார்கள் கொண்டாடுகின்றார்கள் இது போலவே உலகின் பல்வேறு நாடுகளில் நம்ப முடியாத கதைகளும் கொண்டாட்டங்களும் இருக்கின்றது அதிக இருள் கவ்வும்
குளிர்காலங்களில் விழாக்கள் அதிகமாகக் கொண்டாடப்படுகின்றது அதற்குள் பொருள் உண்டு.
டென்மார்க்கில் ஒரு கிழவிபோல பொம்மை செய்து நீர்நிலைகளின் அருகில் உயரமாக விறகு கட்டைகளை சாய்த்து அதன் மேல் கிழவிப் பொம்மையை வைத்து கொளுத்துவார்கள்
அந்த நாளை மிகவும் மகிழ்வுடன் வெளியில் வந்து பியர் குடித்து புல்சர் (பன்றி இறைச்சி கழிவில் செய்த நீளமான ஒரு தின்பண்டம் - சோசேஜ் ) உண்டு மகிழ்வார்கள் இதையொத்த நிகழ்வுகள்
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகின்றது மனிதன் மகிழ்வாக இருக்க வேண்டும்
அதற்கே கொண்டாட்டம் அதை மதத்துடன் இணைத்து பார்ப்பது இந்துக்களின் எடுப்பு
இன்று காதலர் தினம் அம்மா தினம் அப்பா தினம் ஆசிரியர் தினம் இன்னும் என்ன என்னவெல்லாமோ கொண்டாடி மகிழ்தல் போல் அன்று அது, இன்னும் 50 ஆண்டுகளில் இன்று புதிதாக முளைத்துள்ள கொண்டாட்டங்கள் பெரிதாகக் கொண்டாடப்படலாம் வெடி வெடித்து புத்தாடை அணிந்து யார் கண்டார் அப்போ இதென்ன அறிவுகெட்ட வேலை என்று சொல்லவும்
ஆக்கள் வருவார்கள் . மாற்று கருத்துக்கள் என்றும் நீடிக்கும் தவிர்க்க முடியாதது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக