காற்றுப்படாத பக்கங்களில்
எழும் உணர்வுகள் சில சமயம்
தீட்டுப்படுகின்றன தீட்டாததால்
வந்த தீட்டு என திட்டும் விழும்
நாள் ஞாயிறு கண்ட பொழுதில்
மலரும் மலர்கள் நாள் திங்கள்
காண்பதற்குள் ஞொள்கல் ஆவோம்
என வாடாது மகிழ்கின்றனவே
ஒரு மாலைக்குள் மடிவது அறியாதவை
ஒரு மாலையில் மணக்கின்றனவே
அவற்றிலும் வண்ணமும் வர்ணமுமுண்டு
ஆனாலும் பக்கத்தில் உரசியபடி சிரிக்கின்றன
ரோஜா மல்லிகை கனகாம்பரம் செவ்வந்தி என
சாதிகள் பல ஆனால் யாரும் எதையும்
ஒதுக்காது விருப்புடன் முகர்கின்றார்கள்
வசம் செய்யும் வாசம் எல்லோர்க்குமுண்டு
யாருமேலே கீறினாலும் இரத்தம் ஒன்றுதான்
ஆக மொத்தம் நீயும் நானும் பத்து மாசந்தான்
தேசமெல்லாம் நேசத்தோடு சேர்ந்து வாழுது
தமிழ்த் தேசம் மட்டும் ஒன்று கூட மாட்டேனெங்குது
ம.இரமேசு
எழும் உணர்வுகள் சில சமயம்
தீட்டுப்படுகின்றன தீட்டாததால்
வந்த தீட்டு என திட்டும் விழும்
நாள் ஞாயிறு கண்ட பொழுதில்
மலரும் மலர்கள் நாள் திங்கள்
காண்பதற்குள் ஞொள்கல் ஆவோம்
என வாடாது மகிழ்கின்றனவே
ஒரு மாலைக்குள் மடிவது அறியாதவை
ஒரு மாலையில் மணக்கின்றனவே
அவற்றிலும் வண்ணமும் வர்ணமுமுண்டு
ஆனாலும் பக்கத்தில் உரசியபடி சிரிக்கின்றன
ரோஜா மல்லிகை கனகாம்பரம் செவ்வந்தி என
சாதிகள் பல ஆனால் யாரும் எதையும்
ஒதுக்காது விருப்புடன் முகர்கின்றார்கள்
வசம் செய்யும் வாசம் எல்லோர்க்குமுண்டு
யாருமேலே கீறினாலும் இரத்தம் ஒன்றுதான்
ஆக மொத்தம் நீயும் நானும் பத்து மாசந்தான்
தேசமெல்லாம் நேசத்தோடு சேர்ந்து வாழுது
தமிழ்த் தேசம் மட்டும் ஒன்று கூட மாட்டேனெங்குது
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக