உதிரும் பூக்கள் அழுவதில்லை
தழுவும் கைகள் பேதம் பார்ப்பதில்லை
உருகும் நெஞ்சு வஞ்சமில்லாதது
வடிக்கும் சிலை பொறுமையின் சின்னம்
பனிக்கும் விழி இரக்கத்தின் அடையாளம்
இனிக்கும் மொழி ஆக்கத்தின் திறமை
குளிக்கும் குருவி தூய்மையின் தேவை
அளிக்கும் கரம் கருணையின் கடல்
தளிர்க்கும் மரம் பிறப்பின் அழகு
ஓடும் முகில் முயற்சியின் வலிமை
பாடும் மீன் மொழியில்லா கவிதை
கூடும் இனம் ஒற்றுமையின் நிழல்
நாடும் மனம் வேதனையின் ஆரம்பம்
தேடும் சொந்தம் உரிமையின் பெருமை
ம.இரமேசு
தழுவும் கைகள் பேதம் பார்ப்பதில்லை
உருகும் நெஞ்சு வஞ்சமில்லாதது
வடிக்கும் சிலை பொறுமையின் சின்னம்
பனிக்கும் விழி இரக்கத்தின் அடையாளம்
இனிக்கும் மொழி ஆக்கத்தின் திறமை
குளிக்கும் குருவி தூய்மையின் தேவை
அளிக்கும் கரம் கருணையின் கடல்
தளிர்க்கும் மரம் பிறப்பின் அழகு
ஓடும் முகில் முயற்சியின் வலிமை
பாடும் மீன் மொழியில்லா கவிதை
கூடும் இனம் ஒற்றுமையின் நிழல்
நாடும் மனம் வேதனையின் ஆரம்பம்
தேடும் சொந்தம் உரிமையின் பெருமை
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக