வியாழன், 2 அக்டோபர், 2014

பின்வரும் குறளுக்கு அடியேன் வரைந்த வரிகள்

"செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் "
...

சுடு சோறு குழம்போடு சுவைக்கின்ற தமிழரே 
கருவோடு பிறந்த நின் தமிழுக்குக்  காது கொடுமையா

நலமான கருத்தினை நின் அறிவு  சுவைக்கட்டுமே
இல்லை நீர் இருந்தென்ன வாழ்ந்தென்ன பயனையா

எருதோடு எருதாக வாழாதே என் தமிழா
ஏற்றங்காண இன்பத் தமிழினைப்  படியயையா

கருத்தேந்தித் தமிழ்க்களம் பூரையா
அன்றோ ஏழுலகும் இசையாகும் உன் பேர்தானையா

பொழுது போக்கப்  போத்து சிநேகம் ஏனையா
பழுதாக்கும் உன்னைப்  பரதேசிகள் நட்புத் தானையா

மானங் கெடுக்கும் மதுவைப்  போதைக்கு நினையாதையா  
இன்பக் கடலென்னும் தமிழின் போதையிலே நீந்தையா
 
தமிழ் படித்தால் ஓடிவரும் நல்ல பண்பு தானையா 
தலை நிமிர்ந்து நின்றே பேர் மணக்க வாழலாமையா 

பிறந்தான் இறந்தானென்று உலகம் பேசக்கூடாதையா
 இருந்தான்  படைத்தான் என்றுலகம்  பேச வேணுமையா

(போத்து = மனக்குற்றம் உடையோர்
இசை = புகழ் )

ம.இரமேசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக