புதன், 1 அக்டோபர், 2014

இது எனது  அனுபவக்கருத்து  உங்களில்  சிலருக்கு அன்றில்  பலருக்கு  
இக்கருத்தில்  உடபாடின்றியிருக்கலாம்  அது  உங்கள்  சுதந்திரம் 
அதை மதிக்கின்றேன் . 


 இங்கே  சேர்க்கத் தெரிந்தோரே செல்வந்தர்  வாழ்வில் வென்றவர் . 


உழைத்த பணத்தை  செலவு செய்யாது  சேர்க்கத் தெரிந்திருந்தாலே  வாழ்வில்  வெற்றி  வரும்  பொருளாதாரம்  உயர்ந்தால்  மதிப்பும்  மரியாதையும்  தானாக வரும்  என்னதான்  உழைப்பையும் முயற்சியையும்  சிறப்பாகக்   கொண்டிருந்தாலும்  உழைத்த  காசைச்   சேர்க்கத் தெரியாது போனால்  வாழ்வில்  பொருளாதார  முன்னேற்றம்  கிடையாது.  அதன்படி  நோக்கில்  வாழ்வில்  தோல்வியே -   காசை  சேர்க்கத் திறமை  இருக்கவேண்டும்  குறிப்பாக  நப்பித்தனம்  (சிக்கனம்)  இருக்கவேண்டும் .

மடியில் கோடி பொன்  இருப்பினும்,   செத்தவீட்டுக்கு  செல்லவேண்டும் செலவு செய்யவேண்டும்  இரண்டு ரூபா  கடன் தாருங்கள் என்று கேட்டால்  கொடுக்கக் கூடாது,  இப்படியான பண்பற்ற  இரக்கமற்ற குணங்களுடன்  வாழும் மனிதர்களே  வாழ்வில்  வெற்றியை  தொடுகின்றார்கள், சொந்த அனுபவத்தில் கண்டது. 

 பணம் யாரிடம்  நிறைய இருக்கின்றதோ  அவரே  வாழ்வில் வெற்றி பெற்றவர்  என்பது பொது நோக்கு. பணம்  அதிகம் வைத்திருக்க பொருளாதார    பயம்  நீங்குகின்றது.   28 ஆண்டுகளில்  வேலைக்குப்போய் உழைத்தேன் என்று  சொல்ல முடியாத  ஆட்கள் சிலர்  பெரும் தனவந்தராக  இருப்பதையும் காண்கின்றேன், சொந்தவீடு இரண்டு கார்   கடைக் கட்டிடம்  இங்கே,  ஊரில்  எப்படியோ  அறிகிலேன், இத்தனைக்கும்  அந்நபர்  வேலை  செய்ததே  கிடையாது  காசை சேர்த்து  வட்டிக்குக் கொடுத்து  சேர்த்ததே  அவரின்  வெற்றி வாழ்வாகும் .


கண்ணதாசன்  இந்தியப் பிரதமரின்  சம்பளத்துக்கு  நிகராகப்   பணம்  வாங்கியவர்  ஆனால்  பொருள் வாழ்வில்  தோற்றவர் செல்வத்தைச் சேர்த்து வைக்கத் தெரியாமல்  இரசனைக்கு  முதலிடம்  கொடுத்து  மகிழ்ந்தவர் அதனால்  மற்றவர்கள் பெறாத அனுபவங்களை அவரால்  பெறமுடிந்தது  மனித உணர்வின்  பெருவாரி நரம்புகளை அசைய  வைத்தார்  ஆட்களைப்   படித்தார்,  செல்வத்தில்  ஆட்களைப்   படிப்பதிலும்  வறுமையிலேயே மனிதர்களைப் படிக்கலாம் . 

உண்மையான  வாழ்வின் வெற்றி  மனத் திருப்தியே  அது  பொருளால் வராது என்று   சாட்டுக்கு  சொன்னாலும்  உள் மனதில் வசதியான  வாழ்வுக்கு காசு இல்லையே  என்று  இதயம்  அழும்.ஆதலால்  காசைச்  சேர்  சேர்  சேர்  - காசைச்  சேர்த்தவரே  வாழ்வில்  வென்றவர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக