சனி, 11 அக்டோபர், 2014

நடிக வினோதன்

ஈழநாடு  கண்ட  ஒப்பாரும் மிக்காருமில்லா  கலைஞர்  பெருமக்கள்  பலர்,  அதில்  விரல்விட்டு
எண்ணும்  சிலரில்  அடங்கக்கூடியவர்  அன்பின்  வினோத நடிகன்  மரியாதைக்குரிய  பெரியவர்
யோகராசா ,  புத்தூரின்  எழிலைக்   கூட்டப்  பிறந்து பத்தூர் கண்ட  நடிப்புக்குன்று,  எல்லோருக்கும்  நாடி  நரம்புகளில் இரத்தமே  ஓடும்  இவருக்கு  இரத்தத்துடன்  நடிப்பும்  பாட்டும்   எழுத்தும் கலையும்  சேர்ந்து ஓடுகின்றது.  வெளிநாடுகளிலிருந்து  டென்மார்க்  வரும்  தமிழர்கள்  அவசியம்  சந்தித்து  மனம்  மகிழ வேண்டிய உன்னத  மனிதர்  ஐயா  யோகராசா -  இது கபட சிந்தனையின்றி எழுதும் எழுத்து  இதில் புளுகோ வேறு எதுவோ ஒன்றுமில்லை,  ஐயாவின்  திறமையை கண்டவர்கள்  அடியேன்  சொல்வதை ஏற்பார்கள்.  பேசும் போது  பணிவடக்கம் மேடையேறினால்  புலி  ஒன்று கூடினால்  இனிக்கும்  தத்துவமென அம்பின் வேகம் போல்  இருக்கும் அவரின் ஆளுமை,  அவரின்  பெயரை  உயர்த்த  கலையில்  கொடிகட்ட  அவரின் பிள்ளைகளும்  சாதிக்கின்றார்கள்  வள்ளுவன்  நடிப்பிலும்  இசை  கூட்டுவதிலும் சாதிக்க  இளங்கோ  பாடுவதில்  வளரும்   வானமாகின்றார்  இவர்கள்  எல்லோரும் தமிழுக்கு  கிடைத்த  பொக்கிசங்கள்   இவர்களை  இரசிக்க  எனக்குள்  இரசனை  தந்த தாயே உன்பாதம் போற்றி நன்றி சொல்கின்றேன் - அனைவரும் வாழ்க நலம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக