ஞாயிறு, 5 அக்டோபர், 2014

அந்தமாரிக்  குழம்பு  கொடுவாமீனில்
அதுக்கு உவப்பா  சில பெக்குகள்
என் தமிழிச்சிகளை  நினைத்தால்
மிகவும் கவலை,  ஏன்  அவையளும்
இரண்டு  பெக்கு போட்டு  மகிழ்வா
இருக்கலாந்தானே -  ஏய்  ஆம்புள !
அதென்ன  உனக்கு மட்டுமா  மது
எங்கண்டை  பொம்பிளையளும்
குடிச்சு  மகிழவேணும்  ஔவையார்
போல,  மதுவோர்  மாயத் திரவம்
அளவு மீறினால்,  அளவுடன்
உண்டால்  ஆய்க்கினையில்லை .

பத்து வயதில்  ஐந்தாம் வகுப்பில்
படிக்கையிலே அந்தக் கொச்சிக்கடை
ரோட்டால்  நடந்து  வருவதுண்டு
அட்டணக்கால் போட்டு  ஆணும்
பெண்ணும்  பேமன்ரில் இருந்து
கள்ளுக்  குடித்து  மகிழ்வார்கள்
மையோக்கா  களி முன்னால்  
ஒரு தாமரையிலையிற் கிடக்கும்
அந்தத் தவறணை மூக்கை  வருத்தியது

அந்த வீதியில்  ஒருநாள்  அப்பு
ஒருவர்  தடியால்  தட்டித்தட்டி
நடக்க  முந்தநாள் படித்த பாடம்
நினைவில் வந்தது
தடியை  பிடித்து அப்புவுக்கு
உதவ  முயன்றேன் 
அவர்  தப்பு  செய்கின்றான் யாரோ 
என  நினைத்து பத்துவயதுச் சிறுவன்
எனக்கு  வீசி  விளாசினார்  பொல்லை
ஆ  என்று  அலறிய  நான்  நூறு  மீற்றர்
தொலைவிலிருந்த  சித்தப்பாவின்
வைத்திய நிலையம்  ஓடினேன்
முழங்கைக்கு ஒருசாண்  கீழே
நல்ல  அடி  வீழ்ந்தது,
நடந்தவை அனைத்தும்  சொன்னேன்
சீயாவிடம்  (சித்தப்பா)
அவரை  நான்  அப்படித்தான்
அழைப்பது   அவரோ 
கெக்கட்டம் போட்டு சிரித்துவிட்டு
ஏதோ ஒரு எண்ணெயைத் தடவினார்
நாலு நாளில்  நோவு நொந்தது (மாறியது)
இன்று கண்டுகொண்டேன்  உதவுகையிலும்
சொல்லிவிட்டு  உதவினாலே  உதவி
பெறுவோருக்கு  எம்மை  விளங்கும்.

ம.இரமேசு
    
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக