இதைத்தான் காண சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் புத்தரும் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரும் தேடி தேடி அலைந்தார்கள் கண்டுகொண்டார்கள் - எங்களுக்கு அடுத்த வேளைக்கு சமைக்க காசு வேண்டும் இல்லை உயிர் எம்மிடம் இல்லை என்னும் நிலை - சாப்பிடும் போது தெருவில் சாப்பாடு இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு ஒரு சாப்பாட்டு பொதியை கட்டிக்கொண்டுபோய் கொடுத்தால் உங்களுக்குள் நீங்கள் தெரிவீர்கள் - கதிரையில் இருக்கும் போது காலுக்கு மேல் கால் போடாமல் இருந்தால் உங்களைக் காணலாம் - கை நீட்டுமொருவனுக்கு இரண்டு கடலைக்கொட்டையை கொடுக்கும் போது நீங்கள் உங்களுக்குள் தென்படுவீர்கள் இதை உங்களுக்கு நான் எழுதும்போது என்னை நான் காண்கின்றேன் பொய்யில்லை புளுகில்லை உண்மை இதுதான் உண்மை மனத்தை பக்குவப்படுத்தி ஆழமாக சிந்தியுங்கள் அகப்படும் அம்புட்டுந்தான் .
தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டும் அந்த தன்மை வந்துவிட்டால் நீங்கள்
உங்களை காண்பீர்கள் உங்களை நினைத்து உள்ளுக்குள் நெக்குருகுவீர்கள்.
தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டும் அந்த தன்மை வந்துவிட்டால் நீங்கள்
உங்களை காண்பீர்கள் உங்களை நினைத்து உள்ளுக்குள் நெக்குருகுவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக