திங்கள், 13 அக்டோபர், 2014

இது ஒரு  சிந்தனைக்கான 
இயம்பல்  எவரையும்   நிந்தனைக்கு  உள்ளாக்குவது நோக்கன்று

விரதம்  இருந்தால் சமைக்க ஒரு சட்டி   மச்சம்  சமைக்க  ஒரு சட்டி  என்று  வைத்து  நம்மை  நாமே  ஏமாற்றுகின்றோம்  என்றே  எனக்கு  தோன்றுகின்றது.  வயிறு ஒன்றே அதற்குள்  எல்லாம்  போகின்றது
அதை  மாற்ற முடியவில்லையே . தண்ணீர்  எல்லாவற்றையும்  சுத்தமாக்கும் தன்மை கொண்டது  மச்சச் சட்டியை  சரியாக  கழுவினால்  சட்டி  துப்புரவடைகின்றது  நாம்  நீரில் குளித்து  சுத்தமாகுவதுபோல்  - குசேலர்  கிருஷ்ணரை  பார்க்க  அவலுடன் வந்த போது  கிருஷ்ணர்
ஆமைவடையை  இரசித்து  சுவைத்தாராம்  என்று  சுலோகத்தில்  இருக்கின்றதாக  பிரசங்கம் செய்யும்
 பெண்  சொல்ல  கேள்வியுற்றேன்  - கண்ணப்பர்  பன்றியின்  மாமிசத்தை இறைவனுக்கு  படைத்து   தனது பக்தியை  காட்டினார் என்பது சிறுவயதில் படித்தது  -  அர்ஜுனனை  கொல்லும்வரை 
மாமிசம்  புசியேன்  அரக்க நோன்பு கொள்வேன்  என்னால் இயன்றதை  கொடுப்பேன் என்று  கர்ணன்
மகாபாரதத்தில்  சபதமிடுகின்றான்  அங்ஙனமாயின்   கண்ணன்  வரும்  கதையில்  முக்கிய  பாத்திரங்களில்  ஒன்றான   கர்ணன்  மாமிசம்  உண்டிருக்கின்றான் என்பது புலனாகின்றதே .
கோயிலுக்கு  செல்கையில்  வெறுவயிற்றுடன்  சென்றால் வாய்வுத்  தொல்லை  ஏற்படாது  மற்றவர்களுக்கு  தொந்தரவு இருக்காது  என்பதே விரதமிருக்க  உண்டான  காரணங்களில் ஒன்று  உடல் நலத்துக்கும் விரதம் நன்று  மற்று  மரக்கறி சாப்பாட்டில் கடவுள் இருக்கிறார் என்று  நம்பமுடியவில்லை   வெள்ளியில்  மரக்கறி  கடவுள் நாள் என்று  அப்படியானால்  சனியில் ஞாயிறில்  மற்ற நாட்களில்  கடவுள் இல்லையா  அந்நாட்களில்  மட்டும்  மாமிசம்  புசிப்பதுவேன் என்று  சிந்திக்கவேண்டும்.   உணவுக்கும்  ஆன்மீகத்துக்கும்  தொடர்பு இருப்பதாக தெரியவில்லை  இஸ்லாமியர்கள்  நோன்பு  முடிந்ததும்   மே மே ,  இம்பா , கொக்கொரோக்கோ  என்று  போட்டு தாக்குகின்றார்களே -  இது ஒரு  சிந்தனைக்கான 
இயம்பல்  எவரையும்   நிந்தனைக்கு  உள்ளாக்குவது நோக்கன்று அடியேன்  மிகுந்த இறைநம்பிக்கையுடையவன்  -  எல்லோரும் இனிதே  வாழ்க நலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக