திங்கள், 20 அக்டோபர், 2014

இப்படித்தான்  இன்று

அங்குமிங்கும்  மேய்ந்துவிட்டு
அறிவாளிபோல் எல்லாம்  எழுதுவான்
அன்பை நட்பை அற்பத்துக்காக  ஒதுக்குவான்
ஆயிரம்  நூல்படிப்பான்  அறிவாளி  என
உள்ளுக்குள்  நதியோடுவான் 
நல்ல  குணம் கொள்ளான்
இவன்    மனவேர் அறிந்தால் 
மக்கள் எண்ணுவரோ

நண்டுக்கும்  சேர்த்தே  ஆதவன் ஒளி
குளிர்காய வெளியில் வந்தது நண்டு
வீச்சு வலைக்காரன்  கண்ணில்  பட
நண்டு காலால்  மிதிக்கப்பட்டு 
கையிற்றால் கட்டப்பட்டு 
சந்தையிலே  விலைபோனது

வண்டிற்  பாலா  வடிவாய் பார்த்து
விலை கேட்டார்,  வாங்கினார்
வீட்டில் கொடுத்தார்  கம கம
வாசத்துடன் வெந்தது  நண்டு
அன்னலட்சுமி   கையால்

பாலா  கவிதை எழுதினார்
தலையங்கம்   கொல்லாதே
ஆகா அற்புதம் என்று
பரிசும் வந்தது  அதை  வாங்க
கொழும்புக்கு  வண்டியேறினார்
மனிதாபிமானி  பாலசுந்தரங்கவடிவேல்
என்ற  அந்த  பாலா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக