அவர்கள் தங்களுக்குள்
ஒரு முடிவை முடிச்சு
வாழ்கின்றார்கள்
போகுமிடமெல்லாம்
அதை காவிச்செல்கின்றார்கள்
தங்கள் முடிச்சில்
முடியப்பட்டவரை
கண்டதும் முடிச்சு
அவிழ்கின்றது
ஏனோ தெரியவில்லை
சில இதயங்களுக்கு
இன்னும் ஆதவன் அருள்
கிட்டவில்லை அவை
இன்னும் இருட்டிலேதான்
கிடக்கின்றன
சூரியன் வரும்வரை
அங்கு ஞாயிறு உதிக்குமா
அவர்கள் சிந்தனையில்
முடிவுகள் மாற்றப்பட்டால்
வெளிச்சம் வரலாம்
ஒரு முடிவை முடிச்சு
வாழ்கின்றார்கள்
போகுமிடமெல்லாம்
அதை காவிச்செல்கின்றார்கள்
தங்கள் முடிச்சில்
முடியப்பட்டவரை
கண்டதும் முடிச்சு
அவிழ்கின்றது
ஏனோ தெரியவில்லை
சில இதயங்களுக்கு
இன்னும் ஆதவன் அருள்
கிட்டவில்லை அவை
இன்னும் இருட்டிலேதான்
கிடக்கின்றன
சூரியன் வரும்வரை
அங்கு ஞாயிறு உதிக்குமா
அவர்கள் சிந்தனையில்
முடிவுகள் மாற்றப்பட்டால்
வெளிச்சம் வரலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக