இதயத்தின் நரம்புகள் வாசிக்கும் முகாரி
அதில் எரியும் விறகுக் கட்டைகள்
அந்த வசந்தத்தின் வடிவை இரசிக்க முடியாத
நெஞ்சின் கீறல்கள் அதில் கொட்டும் குருதி
படக்கென முறிக்கலாம் தடியை
சிறையில் நல்லவர்கள் வேண்டாம்
அது கொடியோரின் கூடாரம்
சக்கரங்கள் நிற்பதனால் அவை ஓட
மறுக்கின்றன என அர்த்தமில்லை
தேவைகள் ஏற்படின் அவைகள் ஓடும்
தூண்டிலில் எந்நேரமும் அகப்படுவதில்லை மீன்
நேரம் அதற்கு துரதிஸ்டம் என்றால் அதிஸ்டம் நமக்கு
முகில்கள் ஓடி இளைக்கும் வியர்வை மழையாகும்
காட்டின் காற்று ஆற்றின் வேகம் முகிலுக்கு திகில்
முதுகு தெறிக்க ஓடும் அழகு எமக்கு களிப்பு
ஒருவர் நோவில் ஒருவர் கொண்டாட்டம்
ஏனிந்த களிப்பு எப்போ வரும் விழிப்பு
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக