செவ்வாய், 21 அக்டோபர், 2014

டி எம் எஸ்  பற்றி அறியாதவர்களுக்கு ஒரு செய்தி  - தூக்கு தூக்கியில்  முதலில் பாட  அமர்த்தியது  இசைச்சித்தர்  ஜெயராமனையே  அவர்
அதிக  தொகை  பணம் கேட்டதனால்  அன்று ஒரு பாடலுக்கு 1000 ரூபா
எட்டு பாடலுக்கும் 8000 இதுக்கு  தயாரிப்பாளர்  ஒத்துக்கொள்ளவில்லை
அதனால்  வளரும் நிலையில் இருந்த  ஐயா  அமரர்  டி எம் எஸ்சிடம்
பேசியிருக்கிறார்கள்  4000ரூபா  தருவதாக  அவர் விடுவாரா  ஆம்  என்று சொல்லிவிட்டார் -  ஜெயராமன்  இல்லை  டி எம் எஸ்  பாடுகின்றார் என்பதை அறிந்த சிவாஜி  கடுங்கோபம்  கொண்டு  எதற்கு  புதிய  ஆள்  ஜெயராமனே
பாடவேண்டும் என்று  டி எம் எஸ் சுக்கு  கடும் எதிர்ப்பை  தெரிவித்திருக்கின்றார்  விடாப்பிடியாக,  ஆன போதிலும்  தயாரிப்பாளரின்
அன்பான   அணுகுதல் கண்டு வேண்டா வெறுப்புடன்  சம்மதம்  சொல்லிவிட்டார்  சிவாஜி,  பாடல்கள் பாடி பதிவான  பின்   பாட்டை கேட்ட சிவாஜி வியப்புக்குள்ளானார்  அட  இந்த புதிய  பாடகர்  என்  குரலிலேயே அருமையாக   பாடியிருக்கின்றாரே  என்று மகிழ்ந்துவிட்டு   பின்  டி எம் எஸ்  ஐயாவுடன்  நல்லபடி கதைத்து இனிமேல்  எனது  படங்கள்  யாவற்றுக்கும் நீங்களே  பாடவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்,   இந்த  விடயங்களை  அறிந்த எம் ஜி ஆர்  மலைக்கள்ளனில்  ஐயா டி எம் எஸ் அவர்களை  பாடவைத்தார்  அந்தப்பாடலும்  உச்சம் தொட உலகு  பாராட்ட  எம் ஜி ஆர்  டி எம் எஸ் ஐயாவிடம் சென்று இனி  எனது படங்களுக்கு  நீங்களே  பாடவேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டார்  பிறகென்ன  டி எம் எஸ்  இல்லை என்றால் இருவரின் படங்களும்  உப்பில்லா  உணவுபோலாகும்   என்ற நிலையை தனது  திறமையால் உருவாக்கி  வைத்தார் -  இரசிகர்களும்  டி எம் எஸ் குரலில்  குளித்து மகிழ்ந்தார்கள்  ஐயாவுக்கு  வயதாக  புறக்கணிக்கப்பட பின் வந்து  அழுதார்கள்  பாட்டு என்னும் பெயரில்  பாடகர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக