புதைக்கப்பட்ட பிணங்களின் கீழே
அழகிய ஆறுகள் ஓடுகின்றன
அதன் சல சலப்பை கேட்க முடிவதில்லை
அதில் நீந்தும் மீன்களைப்பார்க்க முடிவதில்லை
நீரும் மண்ணும் செய்யும் காதல் அமர காவியம்
பூகம்பம் அவற்றுக்கு வில்லன் ஆனாலும்
நிரந்தரமாகப் பிரிக்க முடியாது
ஈரமுள்ள இடங்களிலே நல்லவை விளையும்
ஈரமுள்ள இதயங்களிலே நல்ல எண்ணங்கள் நிலையாகும்
மண்ணுக்குள் உவர் நீருமுண்டு
மனிதரில் கொடியவர்களுமுண்டு
கூடாததைப் படைத்ததன் நோக்கம்
நல்லதை அறியவே
தேடுதலின் வெற்றி மனிதனின் முயற்சி
அறிவின் முதுமை ஞானம்
ஞானத்தின் பக்குவம் ஏற்பு சமதர்மம்
சமத்துவம் பரந்த மனம் பெருந்தன்மை
அழகிய ஆறுகள் ஓடுகின்றன
அதன் சல சலப்பை கேட்க முடிவதில்லை
அதில் நீந்தும் மீன்களைப்பார்க்க முடிவதில்லை
நீரும் மண்ணும் செய்யும் காதல் அமர காவியம்
பூகம்பம் அவற்றுக்கு வில்லன் ஆனாலும்
நிரந்தரமாகப் பிரிக்க முடியாது
ஈரமுள்ள இடங்களிலே நல்லவை விளையும்
ஈரமுள்ள இதயங்களிலே நல்ல எண்ணங்கள் நிலையாகும்
மண்ணுக்குள் உவர் நீருமுண்டு
மனிதரில் கொடியவர்களுமுண்டு
கூடாததைப் படைத்ததன் நோக்கம்
நல்லதை அறியவே
தேடுதலின் வெற்றி மனிதனின் முயற்சி
அறிவின் முதுமை ஞானம்
ஞானத்தின் பக்குவம் ஏற்பு சமதர்மம்
சமத்துவம் பரந்த மனம் பெருந்தன்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக