சனி, 18 அக்டோபர், 2014

சிந்தனைக்குரிய நல்லதோர்  விடையம் தொட்டீர்கள் நன்று நன்று
மனக்கருத்தின் உருவம் (இமேஜ்) தன்னை  பெரிய ஆள்  தானே  எல்லோரையும் விட  சிறந்தவர்  என்று தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் ஓர்  உருவம்  அந்த உருவத்தை  இழக்காது  வளர்க்க  சில மனிதர்கள் படும் பாடு   இறுதியில் அதற்கு  அவர்களே  பலியாகிவிடுகிறார்கள்.   நான் இதைத்தான்  அணிவேன்  இதைத்தான் குடிப்பேன்  இந்தக்கார்தான்  எனக்கு வேண்டும்  இப்படி  பல  பல,  அதி செல்வத்தில் இருக்கையில்  பின்பறலாம்  செல்வம் குறைய குறைய  மனம்  மரண வாசலின் பக்கம் வந்துவிடும்.  தனது நிலை  குலைய (இயலாமை) மனம்  மரணத்தையே  விரும்பும்  அந்தளவுக்கு  மனக்கருத்தின் உருவம் மீது  பக்தி  மோகம்,   இந்த  இமேஜுக்கு  பலியான  ஆள்  எம்ஜிஆர்  அவர்போல் இமேஜை  மோகித்தவரில்லை   இறுதியில் தன்னால்  இயங்க முடியாத  நிலை வருகையில் தூக்க மாத்திரைகளை உண்டு  மரணமாதா  காலடியில் விழுந்தார்  ஆனாலும் அவர்  காப்பாற்றிவந்த  இமேஜ்  நிலைத்துவிட்டது.  செல்வ  அதிகரிப்பில் இருப்பவர்களே  அதிகம்  இமேஜுக்கு  பலியாகின்றார்கள் காரணம் பணத்தால் மனநினைப்பை   கட்டி காப்பாற்றலாம்  என்ற  எண்ணம்  இங்கே ஒரு அழகிய டேனிஷ்  பெண்  எண்ணெய்  விட மறந்த சைக்கிலில்  கீச்சு  கீச்சு  ஒலியெழும்ப அதை  ஓட்டி செல்வாள்  அவள் இமேஜ் பற்றி கவலைப்படுவதில்லை  யாரும் அதை  பெரிது பண்ணி பார்ப்பதுமில்லை  எங்கள் நாட்டில்  சற்று சத்தம் வந்தால்  நக்கல் சிரிப்பு ஏளனம்  இந்த  பழக்க வழக்கம்  அறியாமையே அநாகரிகமே,  இயல்பாக வெளிப்படையாக இருக்க  வேண்டும்  அப்படி யாராவது  இருந்துவிட்டால்  அந்நபரை  குறைசொல்லி  பேசுபவர்களே நம்மில் அதிகம்.   பிறரின்  நக்கலுக்கும்   கிண்டலுக்கும்   ஆளாகிவிடக்கூடாது என்பதற்கே  எங்கள்  வாழ்வை  அங்கே துலைத்தோம்  இங்கு  வந்தும்  பழைய சிந்தனையுடனேயே   வாழும் நம்மவர்கள்  பேருக்குத்தான் வெளிநாட்டில்  இருக்கின்றார்களே  தவிர  மனப்பக்குவம் அறிவு வளர்ச்சியில் இன்னும்  தூரவே  நிற்கின்றார்கள் - எனக்கு எல்லா நிறங்களும் பிடிக்கும்  ஆதலால்  நான்  எல்லா நிறங்களிலும் ஆடை அணிவேன் அதுபற்றி எனது டேனிஷ் நண்பர்கள்    ஒன்றுமே  சொல்வதில்லை  அவர்கள்  எனது   பழக்க வழக்கம் பார்த்தே  சிநேகிப்பவர்கள் நம்ம  ஆட்கள் மட்டுமே  காசு கார் வீடு  உடை  போன்றவற்றை  நோக்கி  சிநேகிப்பார்கள்  இதுவே  நான் 28  ஆண்டுகளில் இங்கு கற்றுக்கொண்டது .சிந்தனைக்குரிய நல்லதோர்  விடையம் தொட்டீர்கள் நன்று நன்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக