செவ்வாய், 7 அக்டோபர், 2014

எனது  பாசமிகு தம்பி  சிவாவின்  பருத்தித்துறை  காணொளி கண்டு யாம் புனைந்தவோர் கவியேடு

அந்த அழகிய இந்துசமுத்திரந் தாலாட்டுங் கரையினிலே 
 தங்கமாய் ஜொலிக்கும் பண்டையோர் பூமியாம் 
 பண்பட்ட மாந்தர் வாழும் பாசவூர் பருத்தித்துறை 
  அங்கே  ஓர் இடைத்தூரம் யான் வாழுங் கவி செய் அராலி 
 அன்றொரு இளம்பராயத்தே பேருந்தில் அமர்ந்தபடி
  அந்த நீலக்கடலின் அழகுண்டு நேர்கோட்டில்
  பயணித்து பறந்திருக்கின்றேன்
  ஹாட்லிக்கல்லூரிக்கு    பந்தடி ஆட
சிறுவர்களுடன் வந்து போனது ஒருதடவை 
 கல்வியில் எல்லை காணத் துடிக்கும்
 இசைமக்கள் வாழும் பேரூர் பருத்தித்துறை
  அதன் எழில் காட்டிய சிவனே நன்றி கோடி யான் உரைப்பேன்.

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக