பொன் பொழுதில் என் மனம்
விதைக்கும் கோடி தினம்
அந்த நீலவானிற் பறந்து
நெய் மணக்கும் காட்டில் விழுந்து
ஓடிவரும் அருவியில் குளித்து
ஆடிவரும் தென்றலில் அசைந்து
பாடிவரும் பாவைக்கு மலர்சூடி
மன்மதன் தேரிற் பறந்து
குறையில்லாக் கன்னியுடன் கூடி
குழவிதனையேந்தி கொஞ்சிக் குலாவி
படியளி நிலத்தில் பயிர் விதைத்து
நெய்தல் மிசை நீலம் மேவி
வங்கம் ஏகித் தங்கம் வாங்கி
மாதங்கம் பூட்டி மகிழவோர் கனவு
விதைக்கும் கோடி தினம்
அந்த நீலவானிற் பறந்து
நெய் மணக்கும் காட்டில் விழுந்து
ஓடிவரும் அருவியில் குளித்து
ஆடிவரும் தென்றலில் அசைந்து
பாடிவரும் பாவைக்கு மலர்சூடி
மன்மதன் தேரிற் பறந்து
குறையில்லாக் கன்னியுடன் கூடி
குழவிதனையேந்தி கொஞ்சிக் குலாவி
படியளி நிலத்தில் பயிர் விதைத்து
நெய்தல் மிசை நீலம் மேவி
வங்கம் ஏகித் தங்கம் வாங்கி
மாதங்கம் பூட்டி மகிழவோர் கனவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக