நிம்மதி நிம்மதி
அன்றொரு காலம்
வாங்கிய போத்தில்களும் நிறைய
அதன் வகைகளும் நிறைய
ஊற்றிக்குடித்த கிளாசுகளும் நிறைய
பற்றவைத்த சிகரெட்டுகளும் நிறைய
செலவு செய்த காசுகளும் நிறைய
ஆடிய ஆட்டங்களும் நிறைய
பேசிய பேச்சுக்களும் நிறைய
சேர்ந்திருந்த சிநேகிதர்களும் நிறைய
கொண்ட மன நோக்களும் நிறைய
உண்ட வகையறாக்களும் நிறைய
எல்லாம் நிறைய நிறைய
கண்ட மிச்சம் என்ன
குடிக்க வந்தவர்கள் எங்கே
அவர்கள் சீட்டு போட்டு
வீடும் காரும் வாங்கிவிட்டார்கள்
வெறுங்கையுடன் சிரித்தபடி வந்தார்கள்
வாங்கோ இருங்கோ என்றுவிட்டு
கடைக்குபோய் போத்திலும் கோலாவும்
டீ பிறிச்சிலிருந்து ஆட்டுத்தொடை
கொஞ்சம் டேஸ்ட்டுக்கு பொரியல்
மிச்சம் குழம்பு
நாலாவது பெக்கில்
இஞ்சைவாரும் ஐசே
என்று தொடங்குவார்கள்
அது எங்கோ எங்கோ போய் முடியும்
அடுத்த சில நாட்களில் , அண்ணே
ஐநூறு குறோண் மாறித்தாறியளே
வியாழக்கிழமை திருப்புறன் என்றால்
விசர்க் கதை கதைக்கிறீர்
நானே மினுசில் காட்டை
வைச்சிருக்கிறன் நீர் ஒருபக்கம் என்பார்
நா கூசாது பொய் சொல்லுவார்
நன்றி மறப்பார் நல்லா யூஸ் பண்ணுவார்கள்
கூடுமிடங்களில் அறிவாளியாக கதைப்பார்கள்
நல்லவனை கண்டால் நாலு பக்கமும் நக்குவார்கள்
நெஞ்சில் என்னதான் நினைத்து வைத்திருப்பார்களோ
தமிழ் பெண்ணாக இருந்திருந்தால் குடிக்க வேண்டி வந்திராது
மன அழுத்தம் வரும்போது கொஞ்சம் பாவித்தால்
மகிழ்வு வந்து நல்லபடி தூக்கமும் வருவது உண்மையே
நம்ம ஆட்களுடன் கூடி களிப்பது வீண் மனத்தாங்கலை உருவாக்கும்
நல்ல கொம்பனி டி எம் எஸ் , சிவாஜி , எம்ஜிஆர் , கவுண்டமணி ,செந்தில்
ஒரு பிரச்சினையுமில்லை நிம்மதி நிம்மதி .
ம.இரமேசு
அன்றொரு காலம்
வாங்கிய போத்தில்களும் நிறைய
அதன் வகைகளும் நிறைய
ஊற்றிக்குடித்த கிளாசுகளும் நிறைய
பற்றவைத்த சிகரெட்டுகளும் நிறைய
செலவு செய்த காசுகளும் நிறைய
ஆடிய ஆட்டங்களும் நிறைய
பேசிய பேச்சுக்களும் நிறைய
சேர்ந்திருந்த சிநேகிதர்களும் நிறைய
கொண்ட மன நோக்களும் நிறைய
உண்ட வகையறாக்களும் நிறைய
எல்லாம் நிறைய நிறைய
கண்ட மிச்சம் என்ன
குடிக்க வந்தவர்கள் எங்கே
அவர்கள் சீட்டு போட்டு
வீடும் காரும் வாங்கிவிட்டார்கள்
வெறுங்கையுடன் சிரித்தபடி வந்தார்கள்
வாங்கோ இருங்கோ என்றுவிட்டு
கடைக்குபோய் போத்திலும் கோலாவும்
டீ பிறிச்சிலிருந்து ஆட்டுத்தொடை
கொஞ்சம் டேஸ்ட்டுக்கு பொரியல்
மிச்சம் குழம்பு
நாலாவது பெக்கில்
இஞ்சைவாரும் ஐசே
என்று தொடங்குவார்கள்
அது எங்கோ எங்கோ போய் முடியும்
அடுத்த சில நாட்களில் , அண்ணே
ஐநூறு குறோண் மாறித்தாறியளே
வியாழக்கிழமை திருப்புறன் என்றால்
விசர்க் கதை கதைக்கிறீர்
நானே மினுசில் காட்டை
வைச்சிருக்கிறன் நீர் ஒருபக்கம் என்பார்
நா கூசாது பொய் சொல்லுவார்
நன்றி மறப்பார் நல்லா யூஸ் பண்ணுவார்கள்
கூடுமிடங்களில் அறிவாளியாக கதைப்பார்கள்
நல்லவனை கண்டால் நாலு பக்கமும் நக்குவார்கள்
நெஞ்சில் என்னதான் நினைத்து வைத்திருப்பார்களோ
தமிழ் பெண்ணாக இருந்திருந்தால் குடிக்க வேண்டி வந்திராது
மன அழுத்தம் வரும்போது கொஞ்சம் பாவித்தால்
மகிழ்வு வந்து நல்லபடி தூக்கமும் வருவது உண்மையே
நம்ம ஆட்களுடன் கூடி களிப்பது வீண் மனத்தாங்கலை உருவாக்கும்
நல்ல கொம்பனி டி எம் எஸ் , சிவாஜி , எம்ஜிஆர் , கவுண்டமணி ,செந்தில்
ஒரு பிரச்சினையுமில்லை நிம்மதி நிம்மதி .
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக