கசாக்கள் - உரைச்சித்திரம்
கடையடியில் சந்திப்பு
சுந்தரலிங்கம் - யாழ்ப்பாணம் போய் என்னத்தையோ கட்டியாளப்போகினையாம்
மணியத்தார் - என்ன லிங்கத்தார் உம்மட பாட்டில புறு புறுக்கிறீர்
செல்வன் - அவர் ஏன் புறுபுறுக்கிறார் எண்டு எனக்குத் தெரியும்
மணி - என்ரா என்ன நடந்தது
செல்வன் - அது !! இப்ப கொஞ்ச நாளா வீட்டில ஒரே விரதம் மனிசனுக்கு மரக்கறி சாப்பிட்டு நாக்கு சீயெண்டு போச்சு அதோட அவையள் பெரிசா செலவழிச்சு ஒண்டும் வாங்காயினை அதுதான் மனுசனுக்கு ஆத்திரம் அவையளில புறு புறுக்குது
மணி - ஓ நானும் சாடைமாடையா கேள்விப்பட்டனான் ஊரில போய் பெரிய எழுப்பங் காட்ட
இஞ்ச தின்னாமல் குடியாமல் சனமெல்லாம் சேர் சேரெண்டு சேர்க்குதுகள் - நாலு பேருக்கு பதிநைஞ்சு பயித்தங்காயில ஒரு குழம்பு வைச்சு காலத்தை ஓட்டுதுகள் - சரி சரி எங்களுக்கேன் மற்றவையின்ர கதை நட நட - நான் கூப்பிட்டது கூட மனுஷனுக்கு கேக்கேல்லை
கந்தசாமி - வணக்கம் மணியண்ணை
மணி - எடை கந்தன் ! எப்படியடா எங்கையடா கனநாளாக் காணேல்லை
கந்தசாமி - நான் ஊருக்கல்லே போனனான் - அங்கை அந்த மாதிரி ஒரு பிரச்சினையுமில்லை
மணி - ஒரு பிரச்சினையும் இல்லாட்டி பிறகேன்ரா இஞ்சை வந்தனி , நீதான் கோடிக்கணக்கில
வைச்சிருக்கிறாய் இன்னும் நாப்பது அம்பது வருசத்துக்கு காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்
இந்தக் குளிருக்குள்ள வந்து ஏன் கஸ்டப்படுறாய் - உங்களைபோல ஆக்களாலதான் புதிசா
வாற எங்கண்டை ஆக்களுக்கு அக்சப் பண்றாங்களுமில்லை - காசைக் கொண்டுபோய் அங்கை இருக்கிற ஏழைச் சனத்துக்கு ஆ ஊ காட்டிப்போட்டு வரத்தானே அங்கை போறனியள்
அதுசரி அங்கை போகேக்கை ஆருக்கும் ஏதாவது குடுக்கிறனியளே
கந்தசாமி - என்னண்னை இப்பிடி கதைக்கிறியள் நான் செத்தவீடண்டாப்போலையல்லோ
போன்னான் - அங்கை நான்போக தெரிஞ்ச சனங்கள் குவிஞ்சிட்டினம் ஆளுக்கு ஆயிரமெண்டு
அம்பதாயிரம் குடுத்துப்போட்டு வந்திருக்கிறான் - சரியண்ணை கொமூனுக்கு போகவேணும்
நான் வாறன்
செல்வன் - ஐயோ அங்கிள் எனக்கு சிரிப்பு அடக்க முடியேல்லை பச்சை புளுகொண்டை
புளுகிப்போட்டு போறான் கந்தன்
மணி - என்னடா என்ன சொல்றாய்
செல்வன் - உவர் இஞ்சை பேசே கொண்டு திரியிறேல்லை மனிசிதான் சகல நிர்வாகமும்
நாலு பேணி சிகரெட் தூள் மட்டும் வாங்கி போட்டுடும் மனுசி மற்றப்படி மருந்துக்கும் காசை
கண்ணில காட்டுறேல்லை ஓசியில குடிக்கிறதுதான் உவற்றை வேலை அதாலை பெடியள் இப்ப
உவரை சேர்க்கிறேல்லை உவர் சொல்றார் தான் அம்பதாயிரம் குடுத்தனாநெண்டு ரெண்டாயிரம்
குறோணுக்கும் மேலை வரும் - இஞ்சை பொக்கற்றில ஒரு குறோணே கொண்டு திரியாதவர் சொல்றார் கதை
மணி - சீ உந்தக்கதை எனக்கு இப்பதானே தெரியுது வா வா போவம் உனக்கும் ஊரா வீட்டு
கதையெண்டா காணும் போலை
செல்வன் - ம் இதுதான் நானா வாய் திறக்குறேல்லை திறந்தா உண்மையா வரும் பிறகு எனக்குக் கெட்ட பேர்
மணி - சரி சரி கோவிக்காதை வா வா ......
(யாவும் கற்பனை )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக