வெம்மைகளில் வெந்து தினம் வாழ்கின்றோம்
உண்மைதனை பலர் திரைபோட்டு மூடுகின்றார்
காற்றையும் விற்பான் வியாபாரி
முடியவில்லை என்பது அவன் கவலை
ஒருபக்கக் கதவுகள் ஒருநாளும் உருப்படியாகாது
மறு பக்கம் அறியாமல் நீதி சொல்லக்கூடாது
புறக் கண்ணில் உண்மை புலப்படுவதில்லை
அதைப் புரிந்து கொண்டால் உண்மை தெளிவாகும்
தூக்கணாங் குருவிகளை சிகரத்தில் வைப்பதில்லை
துயிலும் கனவுகள் விழித்திட நாள் பார்த்து காத்திருக்கும்
எண்ணத்தின் விரிப்புக்கு எல்லைகள் ஏதுமில்லை
அதில் படுத்துறங்க எவராலும் முடிவதில்லை
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக