நெஞ்ச மலரில் நஞ்சுகக்கும் நாகங்கள்
துஸ்டரைக் கண்டு தூர விலகினும்
இஸ்டமுடன் வம்பிழுக்க நாவாடுகின்றார்
பண்பாடு காக்கப் பணிந்து நடப்பவரிடம்
என்பாடு பெரிதென்று இறுமாப்புடன்
சிந்தனையில் வறியவர்களாக ஊர்கின்றார்
நாவடக்கம் பணிவு பக்குவமிலாப்பஞ்சம்
மடிநிறையப் பொருள் கொண்டு நிறைத்தார்
மண்டைக்குள் நல்மதி நிறைக்க மறந்தார்
ஆயிரம் செருப்புகள் கண்டும்
புத்தியில் மாற்றமில்லை
தொண்டைக்குள் நீட்டி ஒலித்தே
சந்தைக்குள் கேட்கும் இசை தருகின்றார்
எங்கே எப்படி நடந்திடலறியார்
இறுதிச்சடங்கிற் கலப்பார்
இன்னுயிர்த் தோழர்களைக் காண்பார்
மா குசலம் மண்டி மகிழ்ந்துரைப்பார்
வேண்டாதா அழுக்குரைத்தே நெஞ்சம் நோவார்
வீணான கதைகள் பேசிக் கும்மாளம் கொட்டிடுவார்
முந்தநாள் வடுக்களை நாவினால் வாட்டிடுவார்
பண்பாடுமில்லை பழக்கவழக்கமுமில்லை
என்னைவிட்டால் ஆளில்லை என்றே வீங்குகின்றார்
அடித்து நொருக்க ஆத்திரம் அலையாய் எழினும்
கற்ற அறிவு அடக்கித் தடுத்தாட்கொள்கின்றது
பொறுமை பொறுமை வேண்டாம் சண்டையென
பணத்திமிரால் பண்ணின்றி ஆழ் நெஞ்சிற் செருக்கேறி
பாரினிலே பெரியவர்போல் வாய்தூக்கி அசைகின்றார்
சீச்சீ தூத்தூ எங்கிருந்து வந்தார் என்ன மனிசரடாவென்றே
ஈங்கோர் பெரியவரும் கரம்விரித்தே மனநோக்கொண்டார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக