புதன், 24 செப்டம்பர், 2014

நவராத்திரிக்கான  முதல்  இதழ்நாளாமின்று
அன்று  பாடசாலையில்  10 ஆம்  நாள்
விஜயதசமி  விழா  ஒலிபெருக்கி  கட்டி
வெகு விமர்சையாகக்  கொண்டாடப்பட்ட
நினைவுகள்  வந்து  மகிழ்த்துது  என்றாலும்
நெஞ்சில் சில நோக்களும்   முகிழ்க்கின்றது  
வீட்டில்  நவ தானியங்கள்  வைத்து அம்மா
அவல் சுண்டல்  வடை  பாயாசம்  பொங்கல்
என்று  நாக்குக்கு  மகிழ்வூட்டினார்கள்
இன்று  எனது  அடி நெஞ்சில்  ஒரு சோகம்
ஆதவன்  குத்துக்கு  அஞ்சாது  முதுகு
வளைத்து  வேகி வேகி  உழைத்த
பொன்னுத்தாய்க்கும்  பெரியசாமிக்கும்
பொங்கவும் உண்ணவும்  வெள்ளைச் சாமிகள்
நல்ல  சன்மானம் வழங்கியிருக்கக்கூடாதா
நாளெல்லாம்  கறுத்து  தங்களை வெளுத்தவர்களுக்கு .
அங்கும்  கறுத்தச் சிறுவர்கள்  இருந்திருப்பர்
ஊரின்  சுற்று  மதில் வீட்டில்  கிளிச்சிறைக்
குழந்தைகள்  கொண்டாடி  மகிழ்வதைப் 
பார்த்து  நெஞ்சம்  வெடித்திருப்பர் ,
உள்ளுக்குள்  தேம்பியபடி அந்தக்
கிழிந்த பாய்களை  ஈரமாக்கியிருப்பர்
எவர் நினைத்தார் அந்தக் குடில்களுக்குள்ளும் 
இதயங்கள்  இருக்குமென
அணைக்க ஒரு அன்னை தெரேசா  இல்லாத
யாழ்ப்பாணம் - ஊரெங்கும் உயர்ந்த  சிரிப்பு
அது ஏழைக்குக்  கிட்டாத  கொப்பு .

ம.இரமேசு.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக