செவ்வாய், 23 செப்டம்பர், 2014

உலகில் மனிதரால்  அடக்கமுடியாதவை  இரண்டு  ஒன்று  கோபம்  மற்றையது  காமம்   இதிலே  கோபத்தை ஒருவாறு  அடக்கலாம்  காமம்  எந்தப்  பயிற்சிக்கும்  அடங்க மறுக்கும்  சாமியார்  என்பவருக்கும்,  உறுப்பும் உணர்வுமுண்டு   அவர்  சொல்லும் நற்கருத்துக்களை  எடுக்கவேண்டுமே
தவிர  அவரின்  சொந்த விடயங்களை  கிளறக்கூடாது  நல்லதை  சொல்பவனுக்கு  காமம்  வரக்கூடாது
என்று  எதிர்பார்த்தல்  தவறு  அவர்  ஒரு பெண்ணை  வல்லுறவுக்கு  ஆட்படுத்தினால்  அவரை 
வெறுக்கலாம்  விரும்பி  வரும்  பெண்ணுடன்  மகிழ்வாக  இருந்தால்  அதில்  தப்பில்லை  என்பதே
எனது  நியாயம்  ஒழுக்கம்  என்பதும்  ஒரு எல்லைக்குள்ளேதான் அடங்கி நிற்கும்  மறைவான இடம்  கிடைக்கும்  போது எல்லைகளை  உடைக்கும்  எங்கள்  ஒழுக்கம்  எப்படி என்பது  எமக்கே  தெரியும்

அச்சமே கீழ்களது ஆசாரம் ; எச்சம்
அவாவுண்டேல்  உண்டாம்  சிறிது 

சுவர்களுக்குச்   சாவி நாக்கு  இருந்தால்  எல்லோர்  கள்ளப் பூட்டுக்களும்  திறக்கும்  உத்தம ரத்தினங்களும் ஒரு  நாடகக் கூட்டுக்குள்ளேயே - சமூக மரியாதைக்கு  வேண்டி  எல்லோரும்  நாடகம்  ஆடிக்கொண்டே  வாழ்கின்றோம் .


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக