புதன், 24 செப்டம்பர், 2014


நீ போறியோ  இல்லை  நான்  போகட்டோ

நம்  உடலுக்குள்  இருந்து  நோய்கள்  கதைக்கலாம்
யார்  முதலில்    (எந்த நோய் ) தாக்குவதென்று .

எப்பொழுதும்  எதையும் தாங்க  மனதைப் பக்குவம்
செய்ய வேண்டும் .

உடல்  எடுத்தால்  அதற்கு நோய்கள் வரும் விபத்து உண்டாகும்
எதுவும்  நடக்கலாம் , கலங்கி  அழுவதால்  பயனில்லை
எதையும் ஏற்கப் பழகினால்  நிம்மதி  உண்டாகும் .

நல்வழியில் அனுபவித்து  வாழ்ந்தவர்களுக்கு  பக்குவம்  ஏற்படும்
நாலுபேருக்கு  உதவி வாழ்பவர்களுக்கு நெஞ்சில்  நோவு வராது
வந்தாலும் நிலைக்காது .

அதுவில்லை  இதுவில்லை  என்று  ஏங்கித் தவிப்பவர்களுக்கு
என்றும் நிம்மதியில்லை

நிறைந்த செல்வமிருந்தும்  அனுபவியாது  உதவி கேட்போருக்கு
கொடுத்து  வாழதவரும்   பிச்சையெடுக்கும்  ஏழைக்கு  சமமே 

கொடுப்பதுவும் துய்ப்பதுவும்  இல்லார்க்கு ;அடுக்கிய
கோடி  உண்டாயினும்  இல்.     (குறள் -1005)



  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக