இருக்கின்றது என்பது அறிவுக்கு தெரிகின்றது
ஒன்று என்னை காக்கின்றதென புரிகின்றது
அதை கண்களால் பார்க்க முடிவதில்லை
கண்களின் மேல் இருந்தும் கண்களை
காக்கும் இமைகளையே எம்மால்
பார்க்க முடிவதில்லை அப்படியிருக்க
எல்லாவற்றுக்கும் மேலான கடவுளை
எப்படிக் காண முடியும்
இமைகள் இருக்கின்றது என்பதை
உணர்கின்றோம் அதுபோலவே
கடவுளை உணரலாமே தவிர
உருவத்துடன் பார்க்க முடியாது
உருவுடன் பார்க்க முடிந்த கடவுள்கள்
அன்னையும் தந்தையுமே அவர்கள்
கைகளையும் கால்களையும்
போன்றவர்கள் இந்த உயிரை
உருவாக்க உதவியவர்கள் .
மனக்கண்ணாடியில் இறைவனைக்
காணலாம் புறக்கண்ணாடியில்
இமைகளைக் காணலாம்.
ம.இரமேசு
ஒன்று என்னை காக்கின்றதென புரிகின்றது
அதை கண்களால் பார்க்க முடிவதில்லை
கண்களின் மேல் இருந்தும் கண்களை
காக்கும் இமைகளையே எம்மால்
பார்க்க முடிவதில்லை அப்படியிருக்க
எல்லாவற்றுக்கும் மேலான கடவுளை
எப்படிக் காண முடியும்
இமைகள் இருக்கின்றது என்பதை
உணர்கின்றோம் அதுபோலவே
கடவுளை உணரலாமே தவிர
உருவத்துடன் பார்க்க முடியாது
உருவுடன் பார்க்க முடிந்த கடவுள்கள்
அன்னையும் தந்தையுமே அவர்கள்
கைகளையும் கால்களையும்
போன்றவர்கள் இந்த உயிரை
உருவாக்க உதவியவர்கள் .
மனக்கண்ணாடியில் இறைவனைக்
காணலாம் புறக்கண்ணாடியில்
இமைகளைக் காணலாம்.
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக