நுய் ஹாவ்ன் - புதிய துறைமுகம் .
1671 இலிருந்து 1673 காலப்பகுதியில் சுவீடன் நாட்டு சிறைக் கைதிகளால் கட்டியெழுப்பப்பட்டதே நுய் ஹாவென் என்றழைக்கப்படும் கடலிலிருந்து செயற்கையாக வெட்டப்பட்ட கால்வாய் இது ஆரம்ப காலத்தில் பொருட்களை நகருக்கு கொண்டுவர அமைக்கப்பட்ட சிறிய துறைமுகம் 1658 - 1660 இல் நடந்த டெனிஸ் சுவீடன் போரில் அகப்பட்ட போர்க்கைதிகளைக்கொண்டு 5ஆம் கிறிஸ்டியன் இந்த சிறிய துறைமுகத்தை அமைப்பதற்கான திட்டத்தை நிறுவினார், 5ஆம் கிறிஸ்டியன் தமிழை நன்றாக கற்று மிகவும் தமிழின் செழுமையை உணர்ந்தவர் அன்றைய கூட்டங்களில் தமிழின் பெருமையை தனது நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லி தமிழை படியுங்கள் இனிய மொழி என்று சிபாரிசு செய்தவர் .
நுய் ஹாவென் 1980 களில் புதுப்பிக்கப்பட்டது முன்னர் மாலுமிகளின் களியாட்ட கூத்து
தளமாகவே இருந்த இடம் பின்னர் சுற்றுலா மையமாக மாற்றப்பட்டது. விதம் விதமான உணவுகளும் மதுக்களும் உண்டு குடித்து களிக்க ஏற்ற இடமாக இன்று நுய் காவென் திகழ்கிறது
படகுச் சவாரியுமுண்டு வசந்தகாலங்களில் நன்றாக வெய்யில் அடிக்கும் நேரங்களில் உல்லாசப்
பயணிகளால் நிரம்பி வழியுமிடம், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள்
இந்த இடத்துக்கு வந்து களித்து மகிழ்வார்கள் அழகிய நிறங்கள் பூசப்பட்ட தொடர் வீடுகள்
அதை ஒட்டியிருக்கும் விடுதிகள் மறுபுறம் கால்வாய் அதில் சிறிய பெரிய படகுகள் கட்டுகளில்
குந்தியிருந்து கதைபேசி மகிழும் மக்கள் ஐஸ்கிரீம் கடைகள் மதுச்சாலைகள் வேடிக்கை காட்டுவோர் இசைமீட்டும் கலைஞர்கள் என்று நுய் காவென் களைகட்டும் அழகிய இடம். கோப்பென்ஹாஹன் நகருக்கான நுழைவாயில் இங்கிருந்தே ஆரம்பிக்கின்றது இப்பொழுது மெட்ரோ வும் இங்கிருந்து அனைத்து உள் நகரங்களுக்கும் ஓடுகின்றது டென்மார்க்கின் வரலாற்று புகழ் பெற்ற எழுத்தாளர்
புலவர் ஹோ சி அனர்சன் இங்கு 20 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது ஒரு முக்கிய குறிப்பு.
எங்கள் தமிழ் மக்கள் இங்கு வருவதில்லை அடியேன் 1996,97,98 காலப் பகுதியில் கோப்பென் காகன் நரை அண்மித்து வாழ்ந்த போது நுய்காவன் சென்று மகிழ்ந்ததுண்டு மிகவும் அழகான
இடம் பல்வேறு நாட்டினரை காணலாம் மனம் மகிழும் இனிய இடம் டென்மார்க் வரும்
சந்தர்ப்பம் கிட்டினால் கோப்பேன்காகன் வந்து நுய்காவனை பாருங்கள் மகிழுங்கள் .
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக