செவ்வாய், 30 செப்டம்பர், 2014

கூலிக்குக்  கொலை  செய்வோர்  கூட்டம்  தமிழ்நாட்டில்  அதிகரிக்க   அளவுக்கு அதிகமாகப்  பணம்  வைத்திருக்கும்  ஆட்களே  காரணம்.  நாற்காலியில்   இருந்தபடி   கட்டுப்பாடுக்கருவியால் தொலைக்காட்சி நிகச்சியினை  மாற்றுவதுபோல்  வீட்டில் இருந்தபடி  தனக்கு   வேண்டப்படாரை
போட்டுத்தள்ளும்    இழிசெயலுக்கு  கோடிக்கணக்கில் பணம் இருப்பதே காரணம்.   வர்த்தகர்கள்
அரசியலாளர்கள்  உச்ச நடிகர்கள்  போன்றோரிடம்  அளவுக்கு மீறிய  பணக்கட்டுக்கள்   தேவையின்றிக் கிடக்கின்றது.   உறவுகளின் உயிர்காக்க   ஒரு  ஆயிரம்   பத்தாயிரத்துக்கு  மக்கள்  பெரும்  பாடுபடுகின்றார்கள்  ஆனால்  அவர்களை ஏமாற்றிப்   பிழைக்கும்  உச்சங்கள்   ஆயிரம் இரண்டாயிரம்  கோடிகளை   சர்வசாதாரணமாகச் சம்பாதித்து  வைத்திருக்கின்றார்கள்.   நாளெல்லாம்  வெயிலுக்குள் நின்று  கடின  உழைப்பை நல்கும்  தொழிலாளிக்கு,  கழிவறை  சுத்தம் செய்யும்  இன்றியமையாச்  சேவை புரிவோருக்கு  சம்பளம்   90  - 200 ரூபா  வரையே,   தாகத்துக்கு  ஒரு  குளிர்பானம்  வாங்கிக்குடிக்க   அவர்களுக்குப் போதிய   சம்பளம் இல்லை.  உழைத்து வாழுங்கள்  திருடக்கூடாது  என்று  மேடைகளில் அறிவுரை சொல்லும்   உச்சங்கள்   கொள்ளையடித்து  கையூட்டு வாங்கி  வளமுடன்  வாழ்கின்றார்கள்.   உழைப்பவன்  ஒழுக்கு  விழும் குடிலுக்குள்  அரைவயிற்றுடன்  வாடிப்  புரள்கின்றான்.


 ஊழல்  செய்த  முதலை  பிடிபட்டவுடன்   முதலைக்காய்  உயிரைத்துறக்கின்றாரே !
அப்படியென்றால்  கையூட்டு வாங்கி  ஊழல் செய்து  வாழ்வது  தர்மமா  அதை  ஏற்கின்றீர்களா?  அவர்கள்  உச்சம்  என்றால்  அதர்மம் செய்யலாம்  அப்படித்தானே ?  படிப்பறிவற்ற  மக்களின் 
மடைமையை   தங்களுக்குச்  சாதகமாகப்  பயன்படுத்தி  அவர்களைப்  பேச்சாலும் நடிப்பாலும்  மயக்கி
ஏய்த்துப் பழரசம்  பருகுவதைக்  கண்டும்  அறிவிலியாக  இருக்கின்றதே ஒரு கூட்டம்.  மிகுந்த  பரிதாபத்துக்குரியவர்கள்,  நாம் நல்லவர் உத்தமர்  என்று  நம்பியதற்கு  எம்மை   ஏமாற்றி விட்டாரே  என்று  கோபம் கொள்ள வேண்டியதை விடுத்து  அவருக்காக  மக்களின்   சொத்துக்களைத்   தீமூட்டி  வன்முறையில்  இறங்கும்  இழிநிலையில்  அறிவற்ற  கூட்டம் -  கர்மவீரர்  அறிஞர்  பெரியார்
போன்ற  மா  மனிதர்களுக்கு  அவர்களின்  பெயருக்குக்   களங்கம் பிறந்தால்  கொதிப்பதில் அர்த்தமுண்டுவிடுத்து,  சட்டம்  சகல  விசாரணைகளையும்  முடித்து    கொள்ளையிட்டார்  குற்றவாளி  என்று  தீர்ப்பளித்தவருக்காக  தீக்கிரையாவதும்   திணறிச்சாவதும்  தீதை  நன்றெனப்  போற்றும் அறியாமை.  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக