வியாழன், 4 செப்டம்பர், 2014

உங்களைப்பற்றி  மற்றவர்கள் கொண்டிருக்கும்  அபிப்பிராயத்தை  கண்டுகொள்ளாதீர்கள்
உங்களைப்பற்றி  நீங்கள்  கொண்டிருக்கும் அபிப்பிராயமே  உங்களை  உயர்த்தும்

பாரதி  வாழ்ந்த காலத்தில்  அவரை  சமூகம்  மதிக்கவில்லை  தாழ்வாகவே  பார்த்தது
அவர்  தன்மீது கொண்டிருந்த நம்பிக்கையும்  அபிப்பிராயமுமே   இன்று  எல்லோரும்
கொண்டாடும் அவரின் படைப்புகள்  உயர  வைக்கப்பட்டுள்ளமைக்கு காரணம்

சொல் புதிது சுவை புதிது  பொருள் புதிது  சோதிமிகு  நவ கவிதை  என்  கவிதை  என
பாரதி அன்று  தன்னை இழித்துப் பேசியவர்களுக்கு  சொல்லி வைத்தார் 

அவர்  உயிருடன் இருக்கையில் அவரின் படைப்புகளை  எவரும்  ஏற்கவில்லை  மதிக்கவில்லை
இறந்தபிறகே அவரின்  வீரியம்  ஆராய்தலுக்கு உட்பட்டு  போற்றப்படது

நம்மவர்கள்  உயிருடன் இருக்கையில்  ஒருவனை மதிப்பதைக்  காட்டிலும்  உயிர்
சென்ற  பின்னேயே  ஆகா ஓகோ  என்று  போற்றுவார்கள்   என்பது  தொன்று தொட்டே
இருந்துவரும்  குறைபாடு.

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக