சனி, 6 செப்டம்பர், 2014

பொய்த் திரைக்குள்

எழுதாத  சட்டத்துள்  மாட்டித்துடிக்கும்  மீனானாய்
உப்பும் காரமும் இரசித்து உருசித்துண்ணும் உயிர் நீ
நீயும் விரகதாபத்தில்  வெந்து மடிவதை  எல்லோருமுணர்வார் 
உன் தாபத்தை  தீர்க்க நற்துணை நாட்ட   தடவிச்  சொல்லியும்
தம்முன்னர்கள் சொல்  கேளாது  வீண் பிடியில் இருக்கின்றாய்
மாயாவுலகில் மாய்கிறது உன் ஆவி உனக்கு புரியவில்லையா
உள்ளமும் உணர்வும் உனக்குமுண்டு பின் ஏன் ஒளிப்பு
உன்னை நீயே  ஏமாற்றிக்கொள்ளும் அறிவாளி  நீ
மல்லிகை மண்ணைப்  பிரிந்தால் வாடாது  வதங்காது
மற்றோர்  மண்ணில்  நடப்பட்டு  மணம் பரப்புகின்றதே
மண்ணில்  உடலெடுத்தால் இன்பமும் துன்பும் பொதுவே
இழந்ததையே எண்ணி  இன்ப வாழ்வை  தொலைக்காதே
தங்கமேனியை  கருக விடுவதால்  யாருக்கு என்ன  பயன்
கோயிலில் சூடிய மாலை பின் பூசையறையில் சூட்டப்படுகின்றதே
நீ இழந்தது மட்டுமே  நல்லதல்ல  பூமியில்  நல்லவைகள் நிறையவுண்டு
நீ கொண்டது மட்டுமே  சாமியில்லை நல்ல  சாமிகள் வெளியிலுமுண்டு
சிந்தி சிந்தி  நல்ல முடிவெடு  எல்லாம் மாயை  நீயும் மாயை நினைப்பும் மாயை
அறிந்தது  எல்லாம்  அறிந்தும் ஏன்  உன்னை  பொய்த் திரைக்குள் மறைக்கின்றாய்?

ம.இரமேசு


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக