கடிவாளக் குதிரை மனிதர்கள் நேர்வழி
அலைபாயும் எண்ணங்கள் வாழ்க்கை
எங்கேயோ எதற்கோ அழுகின்றது மனம்
வெளியில் சொல்ல முடியாத வேகல்கள்
உள்ளே நோகும் வலிகள் உயிரை இடிக்கும்
சில்லாறை வார்த்தைகள் மழைச் சேறாகும்
கல்லறை போகும்வரை குழப்பமே வாழ்வு
ஒடிக்கும் போது அழுவதில்லை மலர்கள்
சிறிது காலத்தில் வாடி மடியும் மணங்கள்
பொழுதோடு எழும் புள்ளினங்கள் நம்பிக்கை
வீண்போகாத நம்பிக்கை உணவுண்டு அவைகளுக்கும்
என்ன நம்பிக்கை மீனவருக்கு இன்று கிடைக்குமா
குடும்பம் நடக்குமா குதூகலம் பிறக்குமா
தந்தியில்லா வீணை அவ்வப்பொழுது அலறுகிறது
கிழிந்த கந்தற் பாலைவனம் ஊளைச்சதை உவர்ப்புநீர்
நாளைப்பொழுது நரிகளுக்கும் சேர்த்தே
வன்மானும் வாடுவதுண்டு, எல்லா நேரமும்
எல்லோர்க்கும் சித்திப்பதில்லை
பொன்னிறக் கரங்கள் ஏந்தும் அமுதம்
உள்ளத்தில் நஞ்சு வாங்கியுண்பார் யார்
உப்பில்லா கஞ்சி உள்ளத்தில் அன்பு
ஓடுகிறார் குடிப்பதற்கு.
ம.இரமேசு
அலைபாயும் எண்ணங்கள் வாழ்க்கை
எங்கேயோ எதற்கோ அழுகின்றது மனம்
வெளியில் சொல்ல முடியாத வேகல்கள்
உள்ளே நோகும் வலிகள் உயிரை இடிக்கும்
சில்லாறை வார்த்தைகள் மழைச் சேறாகும்
கல்லறை போகும்வரை குழப்பமே வாழ்வு
ஒடிக்கும் போது அழுவதில்லை மலர்கள்
சிறிது காலத்தில் வாடி மடியும் மணங்கள்
பொழுதோடு எழும் புள்ளினங்கள் நம்பிக்கை
வீண்போகாத நம்பிக்கை உணவுண்டு அவைகளுக்கும்
என்ன நம்பிக்கை மீனவருக்கு இன்று கிடைக்குமா
குடும்பம் நடக்குமா குதூகலம் பிறக்குமா
தந்தியில்லா வீணை அவ்வப்பொழுது அலறுகிறது
கிழிந்த கந்தற் பாலைவனம் ஊளைச்சதை உவர்ப்புநீர்
நாளைப்பொழுது நரிகளுக்கும் சேர்த்தே
வன்மானும் வாடுவதுண்டு, எல்லா நேரமும்
எல்லோர்க்கும் சித்திப்பதில்லை
பொன்னிறக் கரங்கள் ஏந்தும் அமுதம்
உள்ளத்தில் நஞ்சு வாங்கியுண்பார் யார்
உப்பில்லா கஞ்சி உள்ளத்தில் அன்பு
ஓடுகிறார் குடிப்பதற்கு.
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக