ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

பெண்கள்   நாட்டின்  கண்கள்  என்று சொல்வது  மரபு  அதைப்   பெருமையுடன்  ஏற்பார்கள்  பெண்கள்   அதில்  அனைவருக்கும்  மகிழ்வே  -  நவநாகரிக  மோகம்  பிடித்து  பூவையும்  பொட்டையும்  சுருக்கும்  மாதரை  நினைக்கையில்  ஒரு  தமிழ் மகனுக்கு எழுந்த  வேதனையின்
குரல்  இக் கவிதை  அதற்காக  அவரை ஆணாதிக்கவாதி என்பது  பொருளாகாது, எங்கள்  வழக்கில்   ஆண்களைக்  காட்டிலும்  பெண்களே  நாட்டின்  கலாசார  பண்பாடு அடங்கிய மூல ஸ்திரத்தை  கட்டிக்காக்கின்றார்கள். தொழில் நிமித்தம் பல  இடங்களுக்கு  ஆண்  சென்றுவருவான்  நெடுங்கலாம்  தங்கியும் வருவான்  அந்நிலையில்  பெண்ணே  மண்ணிலிருந்து  அனைத்தையும்  கட்டிக்காத்து  ஒழுக்கமுடன்  வாழ்ந்து குடும்ப  மேன்மை கெடாது  கட்டிக்காக்கின்றாள்  அதன்வழி  ஆணைக்காட்டிலும்  பெண்ணே  கலாசார  விழுமியங்களை  சரியாது  காப்பதில் முன்நிற்கின்றாள்  ஆண்  சென்ற  இடத்தில்  தவறை  செய்துவிட்டு  தண்டனை  பெற்றுவிட்டு திரும்பலாம்  யாரும் அதுபற்றி  பெரிதாகக் குத்துவதில்லை .

அதுவே  பெண்  சறுக்கிவிட்டால்  குடும்பமானம்  முதலில்  சந்தி சிரிக்கும்  பிள்ளைகள்  நண்பர்களால்  ஒதுக்கப்படுவார்கள்   மனமுடைவார்கள் அவமானம் தாங்கமுடியாமல்  இருந்த  ஊரைவிட்டு  வேறு இடம் ஓடுவார்கள் - உறவினர்களின்   நல்லது கெட்டதுகளில்  அப்பெண்  கலந்துகொள்ள முடியாது  போகின்றது கலந்தாலும்  மற்றைய  குடும்பத்துப் பெண்கள்  பேசுவதற்கு  முன்வரார்கள்  அப்பெண்ணை  ஒதுக்குவார்கள்   இது நமது யாழ் மண்ணின்  புழுதியோடு  ஒட்டிய  வழக்கம்  இதையே  மேலோட்டமாகச்   சங்கூதிக் காட்டியிருக்கின்றார்  நாவு.  ஒரு  ஆண் அல்லது பெண்   நல்லவராக  வர  தாயின் அறிவூட்டலும் அன்புமே  அதிமுக்கியமாகின்றது இதைப் பல முன்னோடிகள்  சொல்லியிருப்பது அனைவரும் அறிந்ததே  - "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்  சான்றோன்  எனக்கேட்ட  தாய்  "  எனது  மகன்  பண்புள்ள  சான்றவன்  ஆகிவிட்டால்  அவனால் பெண்களுக்கோ  மற்று  எவருக்கோ   எதுவித இன்னலும்   வராது  என்பதே  அர்த்தம் . இங்கு சபலம் நிறைத்த சான்றோர்  விதிவிலக்கு அவர்களைச்   சான்றோர் என்ற  கணக்கில் அடக்குதலுமன்று . இது ஏன்  பெண்ணுக்கு  மட்டும்   என்றால்   பெண்ணே  ஆணைக்காட்டிலும்
புனிதமிக்கவள்  மென்மையானவள் கலவியால்  உயிரை  சுமக்கும்  தன்மை வாய்ந்தவள்  அதனால்  அவள்  ஆணைக்காட்டிலும்  மேன்மையாக    நடக்க வேண்டியவள் ஆகின்றாள்
நமது பண்பாட்டில்  கலாசாரத்தில். புருஷன்  எங்கு சென்றாலும்  ஒழுக்கம் கெடாது  வாழ்ந்துவரும்
பெண்கள்  நிறையவே  நாட்டிலுண்டு ஒரு சிலர்  நடை  மாறியதை  வைத்து  மொத்தமாகக்
குறிப்பிடமுடியாது - எத்தனையோ  நாடுகள்  கலாசாரங்கள்  இருப்பினும்  இந்தியப் பண்பாடும்
கலாசாரமுமே  பலராலும் பாராட்டப்பட்டு   முதன்மை பெறுகிறது  அப்படியிருக்கையில்
போற்றப்படும்  கலாசாரத்தை  பெண் விடுதலை என்று  பிதற்றி  அழிக்கலாமா ?
எனது  மகள்  அவள் விரும்பியபடி நடக்கட்டும்  சுதந்திரமுண்டு  அவள்  அந்தச்   சுதந்திரத்தை
தப்பான  விடயங்களுக்கு  பயன்படுத்தாமல்   நல்ல விடயங்களுக்கு  பயன் படுத்தலே 
நல்ல  விளைவினைத்தரும்  தறிகெட்டு  நெறிகெட்டு  கூத்தாடுவதற்கல்ல  சுதந்திரம்
பெண்விடுதலை  அடைந்துவிட்டதாகக்  கூறும்  ஐரோப்பிய  அமெரிக்க  நாடுகளில்
பெண்களுக்கு  நடக்கும்  கொடுமைகள்  என்னவென்று  அந்நாடுகளில்  வெளிவரும் 
பத்திரிகைகளை  வாசிப்பவர்களுக்கே  புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக