அன்பானவர்களே இது எனது பொதுவான கருத்து
யாரையும் சுட்டியல்ல
வரதட்சணை வாங்க மும்முரம் காட்டுபவர்கள் பெண்களே
வரதட்சணை வேண்டாம் என்றால் மாப்பிளைக்கு ஏதோ
கோளாறு போல என்பவர்களும் பெண்களே
பணம் வேண்டாம் என்னும் பெண்கள் குறிப்பாய்
நடிகைகள் எதற்கு பணக்கார வியாபாரிகளை (பிஸ்னஸ் மேன் )
தேடி அலைந்து கலியாணம் செய்கின்றார்கள் ஒரு
விவசாயியை மீனவனை உடல் வருத்தி உழைக்கும்
ஏழைத்தொழிலாளியை காதலிக்கக் கூடாதா கல்யாணம்
செய்யக்கூடாதா அவர்களில் நல்லவர்கள் இல்லையா
எல்லோருக்கும் பணம் என்றால் பிடிக்கும் சீதனம்
வாங்குவது தப்பில்லை இவ்வளவு தா என்று கட்டளை
இட்டு கசக்கி பிழிந்து காசை வாங்குவதே தப்பு
ஆதியில் மாட்டையும் பாத்திர பண்டங்களையுமே
சீதனமாகக் கொடுத்தார்கள் புதிய தம்பதிகள் சிறப்பாக
வாழட்டும் என்ற உதவி நல்லெண்ணத்துடன் அதுவே பின்
உயர் சாதிக்காரர் என்போரால் மோசமான விளைவுகளை
கொண்டுவந்தது - ஏழை மக்கள் உடல்வருத்தி உழைப்போர்
பெரிய சீதனங்கள் எதிர்பார்ப்பதில்லை, டாக்டர் இஞ்சினியர்
அட்வகேட் மாப்பிள்ளைகளை பெற்றோரே பெண்வீட்டாரிடம்
அதிகமாக எதிர்பார்ப்பவர்கள் இதில் ஆண்கள் மட்டும் குற்றவாளிகள்
இல்லை பெண்களும் குற்றவாளிகளே கலியாணம் செய்துதான்
வாழவேண்டும் என்ற எழுதாத சட்டத்தை ஏன் காப்பற்ற வேண்டும்
வெள்ளைக்கார பெண்கள் போல் சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள்
பிள்ளை பெற ஆசைப்பட்டால் தொழில் பார்க்குமிடத்திலோ
அருகாமையிலோ நல்லவன் ஒருவனை தேடிக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு சாதி முக்கியம், அந்த மாயையும் வேண்டும்
சீதனமும் கொடுக்கக் கூடாது என்றால் எப்படி? சாதி பாராது
நல்லவனை கைபிடிக்கத் தயாரா ??? சாதியை ஒழிக்க
பெண்களே மும்முரம் காட்டவேண்டும் அப்பொழுதே
சீதனம் ஒழியும் சாதி ஒழிந்தால் சீதனம் ஒழியும்
எவளும் எவனையும் நேசிக்கலாம் என்ற நிலை வரின்
சீதனம் மறக்கப்படும் அன்பே முன்னிறுத்தப்படும் .
உடல் ஆரோக்கியத்திலும் பாலியல் சக்தியிலும்
உடல்வருத்தி உழைக்கும் ஆண்களே வீரியமிக்கவர்கள்
அவர்களாலேயே ஒரு பெண்ணுக்குரிய முழுமையான
திருப்தியை அளிக்க முடியும் உட்கார்ந்து வேலை செய்யும்
ஆண்களால் வேகம் காட்ட முடியாது, இயலாது இதுவே
அறிவியலுண்மை - இன்றே எழுங்கள் தொழிலாளிகளை
காதலிக்க , படித்த பெண்களும் படிக்காத ஆண்களை
மணம் முடித்தால் சமத்துவம் உண்டாகும் .
வெள்ளைகார பெண்கள் பெரிய பதவிகளில்
இருப்பார்கள் அவர்களின் துணைவர்கள்
கட்டுவேலை ஒட்டுவேலை செய்பவர்களாக
இருப்பார்கள் அதுதான் அறிவான மக்கள்
கூட்டத்தின் செயல் . நம்மவர்களின்
சாதி கட்டுக்குள் நிற்கும் பெண்களால்
ஒன்றுமே செய்ய முடியாது
நீங்கள் உண்மையான விடுதலை பெற
முதலில் சாதியை உடையுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக