வியாழன், 11 செப்டம்பர், 2014


மனங்களின்  நிறமென்ன

கடலே  கடலே  கொஞ்சம் சொல்லு
உன்   அழகை  எங்கிருந்து பெற்றாய்
வானே வானே  கொஞ்சம் நில்லு
உன் வடிவழகை  எங்கிருந்து பெற்றாய்
நீலமென்றால்   உங்களுக்குப்  பிரியமோ
மௌனமாகத்   தலையாட்டும்
வெற்றிலைக்  கொடிகளே  எங்கே
பெற்றீர்  பச்சை  நிறத்தை 
பாலே  பாலே  எங்கு பெற்றாய்
வெள்ளை நிறத்தை  உடலே உடலே
எங்குபெற்றாய்  உனக்குள் ஓடும்
சிகப்பு மையை   ஒளியே  உன்
நிறமென்ன  ஒலியே  உன் நிறமென்ன
வேதனையே  சொல்லு  உன் நிறமென்ன
மகிழ்வே  உன் நிறமென்ன
உயர்வே  தாழ்வே  உங்கள்
நிறங்கள்  என்னவோ 
இறந்தவர்கள்  நிறங்கள் என்ன 
இருப்பவர்கள் நிறங்கள் என்ன 
மனங்களின்  நிறங்கள் என்ன  என்ன

ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக