இப்படியும் ஒரு பெண்
சியானியக்கா மிகவும் கண்டிப்பானவ , தமிழின்பால் மிகுந்த பற்றுடையவ
அதே நேரம் ஆங்கிலத்திலும் புலமை மிகுந்தவ - ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி அமெரிக்காவில்
பெரும் பரிசுகள் பெற்றா ஊரில் இருந்த காலத்தில் எங்களுக்குப் பாடங்கள் சொல்லித்தந்து
எங்களை நல்வழியில் நடத்திய சீமாட்டி . நீச்சலடிப்பதில் அவவுக்கு மிகுந்த விருப்பம் மாரிகாலத்தில்
ஊரிலிருக்கும் பானாக் கேணியில் நீந்துவதற்கு அழைத்துச் செல்வா ஒல்லிகளை எங்களுக்குக் கட்டி
நீச்சலடிக்கப் பழக்கியவ சியானியக்கா .
சினிமா பற்றிக் கதையெடுத்தால் அவவுக்குப் பிடிக்காது
படிப்பை பற்றிக் கதையுங்கோ தேவையில்லாத குப்பையைப் பற்றிக் கதைச்சு என்ன பிரயோசனம்
என்று எங்களைக் கண்டிப்பா, சியானியக்காவைக் கண்டால் ஊரில் எல்லோரும் மரியாதை
செலுத்துவார்கள் காரணம் அவவிடமிருந்த பண்பும் நேர்மையும் ஒழுக்கமும் ஒருநாளும் கைதெரியக் கால்தெரியஆடைகள் அணியமாட்டா உறவுக்காரப் பெண்கள் கை தெரியக் கால் தெரிய ஆடைகள் அணிந்திருப்பதைக் கண்டால் மிகவும் ஆத்திரமடைவா உரிமையுடன் கண்டிப்பா நீ என்னவெள்ளைக்காரியே உனக்கேன் உந்த அசிங்கம் பிடிச்ச ஆசை உங்களாலை தான் பெடியள்
உங்களை அசிங்கமா நோக்கிறாங்கள் போய் கழட்டிப்போட்டு பாவாடை சட்டையை போட்டா
இல்லை கிணத்துக்குள்ளை பிடிச்சு தள்ளிப்போடுவன் என்று மிரட்டுவா ; அதுவும் உண்மைதான்
மினிஸ்கேட் போட்டுக்கொண்டுவந்த வேலுச்சித்தாபாவின்ர மகளை (மதிரா) ஒருநாள் கிணத்தடியில
கண்டுவிட்டா கிட்டப்போய்க் கண்டிக்க மதிரா பெண் சுதந்திரம் பேசி அது என்ர விருப்பம்
நீர் போய் உம்முடைய வேலையைப் பாருமெண்டு சொல்ல மதுராவைப் பிடிச்சு கிணத்துக்குள்ளை தள்ளிவிட்டா செத்துப்போ நீ இருந்து எங்களுக்கு சொந்தக்காரியெண்டு சொல்றதைக்காட்டியும் செத்துப்போ என்று முரட்டுத்தனமாக நடந்து கொண்டா நல்லகாலம் ஒரு காயமும் படாமல் கிணத்துக்குள்ளை வைச்சிருந்து இரும்பு ஏணியாலை மதிரா வெளியிலை வந்து அழுதுகொண்டு போவிட்டா அதுக்குப் பிறகு மதிராஅந்தப்பக்கம் தலை காட்டறதில்லை, அப்படியே தலை காட்டினாலும் உடம்பை மறைச்சு ஒழுங்கான உடுப்பிலைதான் தலையைக் காட்டுவா . இது இப்பிடியெண்டாகல்லுண்டாய் வெளியில பஸ்சுக்குள்ளை நடந்த விசயம் இன்னும் பெரிசு
அழகியான சியானியக்காவின்ர காலை ஒருத்தன் தன்ரை காலால கொசு ஓட்டியிருக்கிறான் தெரியாமல்பட்டிருக்கும் எண்டு பொறுத்துப் பார்த்தா ஆய்க்கினை கூடிவிட்டுது எழும்பிப் பின்னாலை இருந்தவனைப் பாத்து எங்கை போவம் கொட்டலெடுக்க காசு வைச்சிருக்கிறியே
எண்டதுதான் பஸ்சுக்குள்ளையிருந்த சனமெல்லாம் திகைச்சுப் போச்சினை கொண்டைக்டர் வந்து
பெடியனை அடிக்காத குறையா திட்ட சனங்களும் முறைக்க பொந்துக்குள்ளாலை வாலை
வெளியில விட்டு சிங்கத்திட்டை மாட்டின நரிபோலை பெடியன்ர நிலை இருந்துச்சுது
நாளைக்கு உன்ர அக்காவை இல்லாட்டி தங்கைச்சிய கூட்டியா நான் என்ர தம்பியைக்
கூட்டிக்கொண்டுவந்து கால் போடச் சொல்லுறன் ஆ , என்றதுதான் பெடியன் அழாக்குறையா
மணியடிச்சு காக்கைதீவிலையே இறங்கித் தப்பினான் - சியானியக்கா பொங்கல் வருசப்பிறப்பு
வந்தால் சாப்பாடுகளைக் கட்டிக்கொண்டு போய்க் கஷ்டப்படுகிற வீடுகளிலை குடுத்து
பேதம் பாராமல் வாழ்ந்தவ, நல்லா படிச்சு உத்தியோகம் செய்த , சாதியில குறைஞ்ச
பெடியனை நேரடியாப் போய்க் கேட்டு கலியாணஞ் செய்த பெரிய துணிச்சல்க்காரி அவவின்ரை பார்வையிலை எல்லாரும் மனிசர் ஏற்றத்தாழ்வு அறிவீனம் என்பதே ஒளியாத் தெரிஞ்சுது .
இப்பிடி ஒரு பெண் அபூர்வம் - அவ என்ன செய்தாலும் நியாயம் இருக்கும், முறையாத்தான் நடப்பாள் தன்ர மகள் என்பதிலை சியானியக்கவின்ரை தகப்பன் மயில்வாகனத்தாரும் தாய் வள்ளியம்மாவும்உறுதியா இருந்தவை. உற்றார் உறவினர் ஊரார் எல்லாரும் சியானியக்காவை போற்றி மகிழ்ந்தவை அவ எல்லா சனங்களோடையும் சமத்துவமா பழகுறதாலை சில ஆக்களுக்கு
அவவை பிடிக்கிறேல்லை - குழை வெட்ட வந்த மார்க்கண்டுவுக்கு காலிலை கத்திபட்டுவிட
துடியாத் துடிச்சு மருந்து கட்டி தேத்தண்ணி போட்டுக்கொடுத்து காசும் குடுத்தவ.
ஏழைப்பிள்ளையள் எல்லாருக்கும் காசு வாங்காமல் இலவசமா பாடம் சொல்லிக் கொடுத்தது
மட்டுமில்லாமல் அவையளுக்கு வீட்டிலை சாப்பாடும் போட்டு பசியாற்றியவ அப்பப்பேக்கை உடுப்பும் வாங்கிக் கொடுக்கிறவ தமிழ்ப் பொம்பிளையெண்டா இப்பிடித்தான் ஒழுங்கா வாழவேணுமெண்டு எப்ப பாத்தாலும் சொல்லிக்கொண்டிருப்பா ஜிகினா சட்டையள் போடுற பிள்ளையளின்ரை பெற்றோரைப் பாத்து எடுத்துச்சொல்லி பிள்ளையள் ஒழுக்கமாக வளர தகுந்த பராமரிப்புச் செய்தவ அமெரிக்காவிலை இருந்தவ ஆஜெண்டீனாவில ஒரு பல்கலைக் கழகத்தில
படிப்பிக்கிறா வயசு போனாலும் கம்பீரம் குறையாமல் வாழ்ந்துவரும் துணிச்சல்க்காரி .
ம.இரமேசு
(பெயரும் மற்றும் கற்பனையே )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக