வியாழன், 25 செப்டம்பர், 2014

முருகன் பாமாலை


தமிழ்க்குமரன்  கரம்பிடித்தே  நடந்திட வேண்டும்
வாழ்வில்  அவனன்றி  நமக்கு யார்துணை  சொல்லு
சரவணபவனே உமையவள் திருமகனே  ஆ  ஆ ஆ 
வேலெடுத்துத்  தமிழ்க்குலம்  காத்த நம்  கனிமுருகா

மணிமுடி கொண்டோரும்  பணிந்த  எம்  அப்பன்
பாரினில்  ஒருவன்  அவனே  நம் தமிழ்த் தலைவன்
சேரிடும்  பொருள்யாவும்  செல்வன்  திருவருளே
கூறிடு எந்நாளும்  நம் குமரன்  திருப்பெயரை 

சிந்தையில்  நிறைந்த எம்  சிவ மைந்தா 
நம் சீவியம் உன்னாலே   சிறக்கும் கந்தா 
விந்தையெலாம்  செய்த வீர வடிவேலா 
கொடுங்கோலரை அழித்தே குறைதீர்ப்பாய்

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக