திங்கள், 29 செப்டம்பர், 2014

அன்றும் நிறையவே  பனி பொழிந்திருந்தது  புதிதாக வாங்கிய  வீட்டின் முன் அமைந்திருந்த  நடைபாதையை பனி முட்டியிருந்தது  சீனித்தம்பி  பனியள்ளியை எடுத்துக்கொண்டு  போய் பனியை  அள்ளி மறுகரையில் போட்டு நடைபாதையை  சரிசெய்து கொண்டிருக்கையில்  அந்தக் கார்  மெதுவாக ஊர்ந்துவந்து  சீனியிடம்  நெருங்கி நிறுத்தப்பட்டது  யன்னலை
தாழ்த்தி,  ஐயா  இந்த  அட்ரஸ்  எங்கே இருக்கின்றது  என்று  முன்பின் தெரியாத  அந்த மனிதர்  கேட்டார் 

சீனி சொன்னபடி  கார்  புறப்பட்டது  சிறிது நேரத்தில்  ஒரு பெரிய கடையின் 
நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு  கடைக்குள் நுழைந்த  குமாருக்கு  அதிர்ச்சி  
ஓராண்டுக்கு  முன்னர்  ஓடிய  தன்  மகள்  அங்கு  கடமையில் இருந்தார்
ஒன்றுமே செய்ய முடியவில்லை மனதில் ஆத்திரம்  பொங்கினாலும்  பல
ஆண்டுகள்  வெள்ளையர்களுடன் பழகியதால்  படித்துக்கொண்ட நாகரிகம்
பொறுமை காக்கச் செய்தது  திரும்பிப்போய்  காரில் உட்கார்ந்து  அழுதார்  குமார்  என்ற குமாரவேல்



மாலா  குமாரின் மகள்  பவிலிருந்து 150  கிலோ மீற்றர்  தள்ளியிருக்கும்
சிறிய நகரத்தில் தகப்பனுடன்  வசித்து வந்த பெண்  படிக்கும் காலத்தில்
அதே நகரில்  வாழ்ந்த  பையனுடன்  காதல் கொண்டு  பின்  அது தந்தைக்கு தெரியவர  அவர் கண்டிக்க  மனமுடைந்துவிட்டு  தற்கொலைக்கு முயன்று
தெய்வாதீனமாகக்  காப்பாற்றப்பட்டு  நலமடைந்து   வீடு திரும்பி
சிலகாலம் இருந்துவிட்டு  காதலனுடன்  சேர்ந்து ஓடிவிட்டாள்  

இதையறிந்த குமார்  மிகவும் வேதனையடைந்தார்  தனுசின்  தந்தை  மயில்வாகனம்   குமாரிடம்  சண்டைக்குப்போனார் எனது மகனை மயக்கி
உனது மகள்  கொண்டோடிவிட்டாள் என்று  இதையே குமாரும் மாற்றி 
மயிலுக்கு சொல்லி  சண்டை பிடித்தார்  இருவரும் வாய்த்தர்க்கம் முற்றி
அடிபட்டார்கள்  காயமடைந்த மயில்  வீடுசென்று தனக்குத் தெரிந்த ஆட்களை
தயார் செய்து ஒருநாள் இரவு  குமார் வீட்டுக்கு சென்று  குமாருக்கு  அடியும் போட்டு விட்டார்

புனிதாவும்  பிள்ளைகளும் கனடாவிலிருந்து   குமாரிடம்  உலாவந்தார்கள்
குமாரின் இரண்டாவது புதல்விக்கு  பூப்புனித நீராட்டு விழா   நடைபெறவிருந்தது   புனிதாவுக்கு  குமார்  சித்தப்பா முறை  புனிதாவின்
கணவர்  சற்று சுகயீனம்  காரணமாதலால்  வரமுடியவில்லை  அவர்  கனடாவிலேயே  இருந்தார்

மகளின்  செயல்  ஆத்திரம் தந்தாலும் குமாருக்கு  பாசம்  ஒருபக்கம்  இருந்தது
மன்னிக்கும் நிலையில் இருந்தார்  குமார்  வீட்டுக்கு  அழைத்துவந்து
மகளையும் மருமகனையும்  வாழவைக்கவேண்டுமென  உள்ளுக்குள் 
எண்ணமிருந்தது குமாருக்கு  தன்னுடன்  வேலை செய்யும் நண்பர் ஒருவர் 
ஒரு விழாவுக்காக  ப  சென்றபோது  அங்கு  மாலா இருப்பதாகக்  கொடுத்த தகவலின் பேரிலேயே  குமார்  அன்று  மகளைத்  தேடிச்சென்றிருந்தார்
மாலாவும் தனுசும்  பவில்  ஒரு  டேனிஷ்  குடும்பம்  வாடகைக்கு விட்ட
வீட்டில்  வாழ்ந்துவந்தார்கள  தனுஸ்  ஒரு உணவுவிடுதியில்  வேலைபார்த்துக்கொண்டிருந்தார்  

அந்த முகவரிக்கான  தொலைபேசி இலக்கத்தை  எடுத்து  தொடர்புகொண்டார்
அங்கே  அந்த டெனிஸ் குடும்பத்துப்பெண்  தொலைபேசியை  எடுத்து
உரையாடினார்  மாலாவுடன் பேசவேண்டும் என்று  குமார்  கேட்டார்
இது  மாலாவுக்கு சொல்லப்பட  குமார்  மகளிடம்  பேசினார் 
பிள்ளை அப்பா எல்லாத்தையும் மறந்திட்டன்  நீங்கள்  மீனாவின்ர  பூப்புனித நீராட்டு  விழாவுக்கு  வரவேணுமென்றார்  மிகவும்  மகிழ்ந்த மாலா  ஆகட்டுமென்றார்  குமார்  மிகவும் மகிழ்ந்தார் 

மாலா தனுசிடம்  ஒரு மாலைப்பொழுதில்  நடந்தவற்றைக்கூறினார்
தனுஸ்  - நீ போறதெண்டா போவிட்டு வா  நான்  வரேல்லை  என்றார் தனுஸ்
தர்க்கம்  அதிகரித்தது  தனுஷ்  ஜாக்கட்டை  மாட்டிக்கொண்டு வெளியில் 
வெளியேறி  ஒரு  மதுச்சாலைக்குள் சென்றார்  பின் வீடுதிரும்பி 
உறங்கினார்  அடுத்தநாளும் எழுந்து  மாலா  தர்கித்தார்   தனுஸ்  தீர்க்கமாகச்  சொல்லிவிட்டார் நான்  வரமாட்டேன்  என்று

மாலா தனியாச் சென்று  விழாவில்  கலந்து கொண்டார்  எல்லோரும்  குதூகலித்தனர்  விழா முடிந்து  2ஆம்  நாள்  ஒரு தொலைபேசி
கனடாவிலிருந்து  வந்தது  மிஸ்டர்  பரா  காலமாகிவிட்டார்  புனிதா
குளறினார்  கண்டா செல்வதற்கான  அலுவல்களை  குமார்  செய்தார்

மாலா  விழாவுக்கு வந்து சென்றதை  தனுசின்  தந்தையறிந்தார்
அவர்கள்   ப வில்  இருப்பதையும் அறிந்து தனது  அடியாட்களுடன்
சென்று தனுசின் வீட்டை  அடைந்தனர் அவர்களின்  ஆர்ப்பாட்டப்
பேச்சை  அறிந்த  டெனிஸ் வீட்டுக்காரப் பெண்  போலீசுக்கு
தகவல் கொடுக்க  போலீஸ் வந்து  அவர்களின்  விபரங்களை
பெற்றுவிட்டு  அவர்களை  விரட்டியது தப்பினோம்டா சாமியென்று
அவர்க்ள்
  ஓடினார்கள்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக