செவ்வாய், 2 செப்டம்பர், 2014

சாதலும்  புதுவதன்று

எத்தனை  எத்தனை மாக்களை
இந்தப்   பூமி சுமந்தது  சுமக்கின்றது
நினைக்க நினைக்க  ஆச்சரியம் 
நான் யார் ? என்  முன்னோர்கள்
இறந்ததைக்   கண்டேன்  என்
பெற்றோர்  இறந்ததையும்
கண்டு விட்டேன்  ஊரில்  அன்று
இன்பமாக  வாழ்ந்த  எத்தனை
பேரை  இறப்பு  அணைத்தது
எல்லாமும்  பார்க்கின்றேன்
 இன்னும்  சில  வினாடிகளில்
அன்றில் நாளை நானும்  இறப்பது
நிச்சயம்  அதற்குள்  இந்த  உயிர்
போடும் கூத்து இன்பதுன்பம்,
எத்தனை  எத்தனை

பொன்னில்  உறங்கும் ஆசை
புகழில் உறங்கும் ஆசை
கண்ணில் உறங்கும் ஆசை
கருத்தில் உறங்கும் ஆசை
உயிரில் உறங்கும் ஆசை
மண்ணில் உறங்கும்  ஆசை
மரிப்பில்  உறங்கா  ஆசை
மரிப்பிலேயே முற்றும் .

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக