சாதலும் புதுவதன்று
எத்தனை எத்தனை மாக்களை
இந்தப் பூமி சுமந்தது சுமக்கின்றது
நினைக்க நினைக்க ஆச்சரியம்
நான் யார் ? என் முன்னோர்கள்
இறந்ததைக் கண்டேன் என்
பெற்றோர் இறந்ததையும்
கண்டு விட்டேன் ஊரில் அன்று
இன்பமாக வாழ்ந்த எத்தனை
பேரை இறப்பு அணைத்தது
எல்லாமும் பார்க்கின்றேன்
இன்னும் சில வினாடிகளில்
அன்றில் நாளை நானும் இறப்பது
நிச்சயம் அதற்குள் இந்த உயிர்
போடும் கூத்து இன்பதுன்பம்,
எத்தனை எத்தனை
பொன்னில் உறங்கும் ஆசை
புகழில் உறங்கும் ஆசை
கண்ணில் உறங்கும் ஆசை
கருத்தில் உறங்கும் ஆசை
உயிரில் உறங்கும் ஆசை
மண்ணில் உறங்கும் ஆசை
மரிப்பில் உறங்கா ஆசை
மரிப்பிலேயே முற்றும் .
ம.இரமேசு
நெய்தலாள் ஏக்கம்
1) இல்லாத ஆசையிலே என்மனதை ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
2) ஓடம் விட்டு போகையிலும் என் மனதை ஆடவிட்டு
கூடவரும் என் மனதை கூட்டிச் சென்று போனானே
1வாலி - 2 இரமேசு
எத்தனை எத்தனை மாக்களை
இந்தப் பூமி சுமந்தது சுமக்கின்றது
நினைக்க நினைக்க ஆச்சரியம்
நான் யார் ? என் முன்னோர்கள்
இறந்ததைக் கண்டேன் என்
பெற்றோர் இறந்ததையும்
கண்டு விட்டேன் ஊரில் அன்று
இன்பமாக வாழ்ந்த எத்தனை
பேரை இறப்பு அணைத்தது
எல்லாமும் பார்க்கின்றேன்
இன்னும் சில வினாடிகளில்
அன்றில் நாளை நானும் இறப்பது
நிச்சயம் அதற்குள் இந்த உயிர்
போடும் கூத்து இன்பதுன்பம்,
எத்தனை எத்தனை
பொன்னில் உறங்கும் ஆசை
புகழில் உறங்கும் ஆசை
கண்ணில் உறங்கும் ஆசை
கருத்தில் உறங்கும் ஆசை
உயிரில் உறங்கும் ஆசை
மண்ணில் உறங்கும் ஆசை
மரிப்பில் உறங்கா ஆசை
மரிப்பிலேயே முற்றும் .
ம.இரமேசு
நெய்தலாள் ஏக்கம்
1) இல்லாத ஆசையிலே என்மனதை ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
2) ஓடம் விட்டு போகையிலும் என் மனதை ஆடவிட்டு
கூடவரும் என் மனதை கூட்டிச் சென்று போனானே
1வாலி - 2 இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக