வங்கம் மேவும் சங்கம் கண்டவளே
வாரியணைக்கையில் வழுக்கி விழுபவளே
தங்கம் நீ உன் தரத்துக்கு இணையேது
பங்கம் வருங்காலும் பனிக்காது
நெஞ்சம் நிமிர்ந்து நிற்பவளே
துஞ்ச மறந்தே துதிக்கின்றார்
உன்னைத் தொட்டு மகிழும் காதலர்தாம்
மஞ்சம் விரித்து உன்னைக் கட்டியணைத்து
மகிழ்ந்தானே கம்பன்
கள்ளில் மயங்கிக் கள்ளக் காதல்
செய்தான் கண்ணதாசன்
வேலிதாண்டிக் கூந்தல்
வாரினாரே வாலி
ஏழைக்கும் பாழைக்கும்
ஏற்றது செய்யென்றார்
பட்டுக்கோட்டை
உன்னிலே நெருப்பெடுத்து
கண்ணிலே தீமூட்டினான் பாரதி
அவன் வழி ஏகினான்
பாரதியடிமை, இன்னும்
உன்னைச் சீராக மேவி
பாராக அழகு பார்த்தவர் பலர்
வாழ்க உன் சீரிளமை
பெருகட்டும் நின் கீர்த்தி
வாழ்க தமிழே வாழ்க
ம.இரமேசு
வாரியணைக்கையில் வழுக்கி விழுபவளே
தங்கம் நீ உன் தரத்துக்கு இணையேது
பங்கம் வருங்காலும் பனிக்காது
நெஞ்சம் நிமிர்ந்து நிற்பவளே
துஞ்ச மறந்தே துதிக்கின்றார்
உன்னைத் தொட்டு மகிழும் காதலர்தாம்
மஞ்சம் விரித்து உன்னைக் கட்டியணைத்து
மகிழ்ந்தானே கம்பன்
கள்ளில் மயங்கிக் கள்ளக் காதல்
செய்தான் கண்ணதாசன்
வேலிதாண்டிக் கூந்தல்
வாரினாரே வாலி
ஏழைக்கும் பாழைக்கும்
ஏற்றது செய்யென்றார்
பட்டுக்கோட்டை
உன்னிலே நெருப்பெடுத்து
கண்ணிலே தீமூட்டினான் பாரதி
அவன் வழி ஏகினான்
பாரதியடிமை, இன்னும்
உன்னைச் சீராக மேவி
பாராக அழகு பார்த்தவர் பலர்
வாழ்க உன் சீரிளமை
பெருகட்டும் நின் கீர்த்தி
வாழ்க தமிழே வாழ்க
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக