சனி, 6 செப்டம்பர், 2014

 ஆசிரியர் நாளை  உருவாக்கிய  சர்வபள்ளி  இராதா கிருஷ்ணன்  ஐயாவுக்கு  கோடி  வணக்கம்.

என்  வாழ்வில்  யான்  போற்றும்  ஆசிரியர்கள்  பெயர்களை  இங்கு  வெளிவிடுவதில் மகிழ்கின்றேன்

 அராலி  இந்துக்கல்லூரியில்  எனக்கு  முதல் முதல் அருவரியில் தமிழ் சொல்லித்தந்த சின்னம்மா ஆசிரியை அடுத்து எனதுபெரியப்பா முறையான வட்டு  சதாசிவம் ,அராலி  கி.நெல்லிநாதர்,
 அராலி நடராசா, காரைநகர் டானியல் , மானிப்பாய் தர்மலிங்கம் (புகழ்பெற்ற  நடிகர் ), அராலி நடனசண்முகதாசன் , வட்டு திருமதி பாலன் செல்லையா ,

கொழும்பு  விவேகானந்தாக் கல்லூரி -  திருமதி கந்தசாமி  ஏழாலை ,

வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியில்  மதிப்பு மிகு   மன்னார்  டேவிட்  வர்த்தகம் , பொருளியல்  வேலணை  சதாசிவம்,  கணக்கியல்  அராலி/திருநெல்வேலி  தங்கராசா , அளவையியல்  வட்டு  ஆனந்தரட்ணம்

டென்மார்க்கில்  கே எஸ்  துரை (பல்துறை வித்தகர்) ,  க .ஆதவன் , ஆ .மல்லேஸ்வரி, ஜீவகுமாரன் (எழுத்தாளர்)  அவ்வப்போது  ஐயங்கள்  தீர்க்கும்
ஆற்றலர்கள் .

இவர்கள்  சொல்லித் தந்தவைகள்  ஆயிரம் ஆயிரம்  நான்  விளையாடி விளையாடி  படிப்பின் மகிமை  உண்மை  புரியாது  சற்று  பொறுக்கி எடுத்தது  இரண்டு  மூன்றே  இப்போது  சில 
ஆண்டுகளில்  நானே  எனக்கு  ஆசிரியராகமாறி  மாணவனாயிருந்து   கற்று வருகின்றேன்  அதுவும்
எனக்கு  படிக்க  பிடித்த வேளைகளில் மட்டுமே  .  

உலகில்  இறைவனுக்கு பிறகு  போற்றப்படுபவர்களில்  முதலாமவர்   பள்ளர்
அடுத்து நெய்வோர் , பின் மருத்துவர்  இவர்கள் அனைவருக்கும்  எப்படி எப்படி  செய்ய வேண்டும்
என்று சொல்லிக்கொடுப்பவர்  ஆசிரியர்  மேற்சொன்ன  அனைவருக்குள்ளும்  இருக்கும்  ஒளியானவர்
ஆசிரியரே.  வாழ்க  வாழ்க   ஆசிரியர்கள்  சேவை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக