சனி, 13 செப்டம்பர், 2014

அன்பான  நாவு  - இன்று பல  ஏடுகளில்   கூடுதலாக  க்  ச்  த்   ப்  சேர்க்கப்பட்டு குழம்பல்  நிலை  ஏற்பட்டுள்ளமையே  உங்கள் பிழை பிடிப்புக்கு (க் )காரணம்      சிவகுமார்  என்பதை 
சிவக்குமார்  என்றும்  எழுதுகின்றார்கள்  உங்கள் வழியில் கேட்பதாயின்  க்  மிஸ்ஸிங் இல்லையா   அதுபோலவே  தமிழை (த் ) தவறுதலாக   என்பதை தமிழைத்  தவறுதலாக  என்றும்  எழுதுகின்றார்கள்   அதுவும்  ஒப்புக்கொள்ளப்  பட்டிருக்கின்றது  புணர்ச்சி  இலக்கணப்படி நீங்கள்  சொல்வது   சரியாகும்   ஆனால்   லகர  ழகர  ளகரப்   பிழைகள் மிகவும்  அசுத்தம்  கருத்தை  மாற்றிவிடக்கூடிய  அபாயம் ஏற்படுத்தும்  அதை (க் ) குறித்தே எனது  எழுத்து  இருகின்றது.

அவனைக்  கொண்டுவாருங்கள்  என்பதை  கொன்றுவாருங்கள்  எனப் புரிந்து
கோவலன்  கழுத்தை  அறுத்தார்கள் -   தாங்கள்  எப்படியோ  கழுத்தைக் கொடுக்கத்  தயாரா  


ஐயா  நான்  புலவர் இல்லை - சொன்ன கருத்தை மட்டும்  உள்வாங்குங்கள்   ல  ழ ள  வில்  உங்களுக்கு  நிறையவே   சண்டை   இருக்கின்றது  என்பதை  அறிவேன். புணர்ச்சி இலக்கணத்தில்  பிழை பிடிக்கும் புலமை  உங்களுக்கு இருக்கும்  போது புலவரான தாங்கள்  பிறகு எதற்கு   ல  ழ  ள  எழுதத் தெரியாமல்  தடுமாறுகின்றீர்கள் உங்கள்  கவிதைகளில்  கட்டுரைகளில்  எழுத்துப்பிழைகள் நிறைய  இருப்பதை  பலரும்  சுட்டிக் காட்டுகின்றார்களே . ஒரு சில  தவறுகள்  நம்மையும்  மீறி ஏற்படுவதுண்டே  அதை  சுட்டி காட்டுகையில்  மனப்பக்குவத்துடன்  கோபம்  கொள்ளாது  ஒத்துக்கொள்ள வேண்டும்     எழுத்துப்பிழை  கருத்தை  மாற்றிவிடும்  என்பதே  அனைவரும்  கூறும்  கருத்தாகும் . புலவர்களுக்கும்  தடங்கல்கள்  வருவதுண்டு யானைகளும்  அடிசறுக்கி  விழுந்து எழுவதுண்டு  நாவும்  புலவர்  யானை  போன்றவரே  ஆற்றல் மிகுந்த  வன்மான்  - உங்களின்  அபார  கண்டுபிடிப்புக்கு  பூமாலை  கட்டி  உங்களுக்கு சூட  ஆசைப்படுகின்றேன்   ஆனால்  எனக்கு  மாலை  கட்டத் தெரியாது  உங்களுக்கு  அது நன்றாக வருமே  எனது  சார்பாக  நீங்களே  கட்டி  உங்களுக்கு  சூடி மகிழுங்கள்  ஆண்டாள் போல்  மிகவும்  மகிழ்வேன் -   வாழ்க  நலம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக