புதன், 24 செப்டம்பர், 2014


 இது  தற்பெருமைக்கோ   தம்பட்டத்துக்கோ  எழுதவில்லை  சரஸ்வதியை
நினைத்தால்  நினைவுக்கு  வரும்  நினைவு  அவ்வளவே .

  சரஸ்வதி  பூசைக்காலத்தே   நடந்த நிகழ்வு  -  எங்கள் வீட்டுக்கு  ஊடாகச்  சென்றே  எனது  மச்சான்  முறையானவர்  நடத்திய  டியூசன்  சென்டரில்  தெற்குப்பக்கம்  இருந்துவரும்  என்னுடன்
படித்த மாணவ மாணவிகள்  படிக்கச்   செல்ல வேண்டும்.   நான்  படிக்கச்   செல்வதில்லை  அந்த
நாலரை   ஐந்துமணிப்  பொழுதில்  குளிருங்காலத்தில்  என்னால்  அது  முடியவில்லை
அத்துடன்  டியூசன்  செல்லவும்  பிடிக்கவில்லை -  எனது தாயார்   அவர்கள்  படிக்கச்  செல்வதைப் 
பார்த்துவிட்டு   என்னை  மெலிதாகத்  திட்டுவார் -  பார்   இஞ்சையும்   ஒண்டு  படிக்கிறது
இருக்கு  எழும்பிப் போகுதே   நல்லா  போத்துக்கொண்டு படுக்குதென்று -  சோதனையும் 
வந்தது  பரீட்சை  முடிவுகளும்   வந்தது   டியூசன்  சென்ற  அந்த  8 பெரும்  பெயில்  நான்
பாஸ் பண்ணியிருந்தேன்   அவர்கள்  சரஸ்வதிக்கு  விரதமுமிருந்தார்கள்   நான்  அதையும்
செய்யவில்லை  அனால்  சரஸ்வதி  என்னை  சித்தியடைய  வைத்துவிட்டார்  அடியேன்
மிகுந்த  இறைநம்பிக்கை  உடையவன்  ஆனால்  விரதமிருப்பதில்லை   சடங்குகளில்
நாட்டமில்லாதவன்  இது  தற்பெருமைக்கோ   தம்பட்டத்துக்கோ  எழுதவில்லை  சரஸ்வதியை
நினைத்தால்  நினைவுக்கு  வரும்  நினைவு  அவ்வளவே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக