ஞாயிறு, 14 செப்டம்பர், 2014


 அலையாய்த்   தவழும்  முகிலே 
எங்கே  ஓடுகின்றாய்  உனக்கும்
நிம்மதியாய் உயிர்வாழ ஓர்
நிரந்தர இடமில்லையா
ஈழத்து அகதிகள் போல்  ஓடுகின்றாயே
எங்கே  எதைப்
பார்த்து  ஓடுகின்றாய்
யார் உன்மீது  கொலைவெறி கொண்டார்
ஓடு ஓடு  நீ  ஓடிக்  களைத்து
வியர்வை கொட்டினால்த்தானே
இங்கே நாம்  உயிர்வாழ முடியும்
இங்கே  நம்மவர்கள்  கொட்டும்
வியர்வையினால்  ஊரில்  அடுப்புகள்
எரிவதுபோல் .

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக